இலங்கை

இலங்கையில் மின் கட்டண திருத்தம் : மக்களுக்கு கிட்டியுள்ள வாய்ப்பு!

  • December 16, 2024
  • 0 Comments

இலங்கையில் மின்சாரக் கட்டணத் திருத்தப் பிரேரணைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜனவரி 8ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான முன்மொழிவுகள் மின்சாரக் கட்டணங்கள், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6வது தளம், இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், கொழும்பு 03 என்ற முகவரிக்கும், info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பொதுமக்களின் ஆலோசனைக்கு அனுப்பப்படலாம். 076 42 […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் தலைத் தூக்கும் வரிசை யுகம் : எரிவாயுவிற்காக காத்திருக்கும் மக்கள்!

  • December 16, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி பரித்தித்துறையில் மக்கள் எரிவாயுவை பெற்றுக்கொள்வதாக வரிசையில் காத்திருப்பதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய ஒரு மாத காலமாக அப்பகுதியில் லாப்ஸ் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் (16.12) மக்கள் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக விற்பனை நிலையங்களின் முன்னால் நீண்ட நேரம் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆசியா

தென் கொரிய அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து பதவி விலகிய ஆளும் கட்சித் தலைவர்

  • December 16, 2024
  • 0 Comments

தென்கொரியாவின் ஆளும் மக்கள் சக்திக் கட்சித் (பிபிபி) தலைவரான ஹான் டோங் ஹூன், அப்பொறுப்பிலிருந்து விலகப்போவதாக திங்கட்கிழமையன்று (டிசம்பர் 16) அறிவித்துள்ளார். ஹான், சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தவேண்டும் என்று குரல் கொடுத்திருந்தார். அதற்கு அவர் கட்சியில் எதிர்ப்பு இருந்தது.இருந்தாலும் அவ்வாறு செய்ததற்குத் தாம் வருத்தப்படவில்லை என்று ஹான் குறிப்பிட்டார். “ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்,” என்று ஹான் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் […]

இலங்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு மீட்பு!

  • December 16, 2024
  • 0 Comments

பாணந்துறை – வடக்கு பாணந்துறை, கோரகபால பிரதேசத்தில் வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு பொலிஸாரால் பிடிக்கப்பட்டு பொல்கொட வனப்பகுதியில் அந்த பாம்பு விடப்பட்டுள்ளது. வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக பிரதேச மக்கள் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மலைப்பாம்பை பாதுகாப்பாகப் பிடித்துள்ளனர். பின்னர், பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் […]

இலங்கை

இலங்கை சந்தையில் முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • December 16, 2024
  • 0 Comments

இலங்கை சந்தையில் தற்போது முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் பண்டிகை காலங்களில் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், இன்றையதினம், முட்டை ஒன்று 30 ரூபாய் முதல் 35 ரூபாவுக்கிடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும், சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தையில், தற்போது கோழி இறைச்சி ஒரு கிலோ கிராம் 900 ரூபாய் முதல் 1,200 […]

பொழுதுபோக்கு

விஜய் பட வசூலை முறியடித்து சிவகார்த்திகேயன் புது சாதனை

  • December 16, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயனின் அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்கள் பெற்றது. சிவகார்த்திகேயன் கெரியரில் புது உச்சமாக 300 கோடிக்கும் மேல் இந்த படம் வசூலித்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்டையாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. இதில் மேஜர் முகுந்த் மனைவி இந்து ரோலில் நடித்து இருந்த சாய் பல்லவியில் நடிப்புக்கும் அதிகம் பாராட்டுகள் குவிந்தது. அமரன் படம் கேரளாவில் மட்டும் 13.85 கோடி […]

இந்தியா இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரவை வரவேற்ற இந்திய ஜனாதிபதி, பிரதமர்

  • December 16, 2024
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்றனர். இந்த சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வு புது டில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

செய்தி

இலங்கையில் 2025 ஆண்டு கல்வித் தவணை அட்டவணை வெளியீடு

  • December 16, 2024
  • 0 Comments

இலங்கையில் 2025ம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணையை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய முதலாம் தவணை 3 கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது. அதன் முதற் கட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதி முதல் மார்ச் மாதம் 14ம் திகதி வரை இடம்பெறும். முதலாம் தவணையின் 2ம் கட்டம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை இடம்பெறும். 3ம் கட்டம் ஏப்ரல் மாதம் 21ம் திகதி முதல் மே மாதம் 9ம் திகதி […]

விளையாட்டு

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளின் டெஸ்ட் போட்டி – 10 பந்துகளால் 5.4 கோடி இழப்பு

  • December 16, 2024
  • 0 Comments

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 13.2 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், இடையில் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது. டெஸ்ட் போட்டி தினத்தில் குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வீசப்படாவிட்டால் டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முன்னதாக அறிவித்திருந்தது. இதன்படி 30,145 இரசிகர்களுக்கும் டிக்கெட்டின் முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்தது. இதனால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் […]

செய்தி வாழ்வியல்

மன அழுத்தத்தை ஓட விரட்டும் ஆற்றல் கொண்ட உணவுகள்

  • December 16, 2024
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில், மன அழுத்தம் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநலம் தொடர்பான பிரச்சனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. பணியில் ஏற்படும் வேலைபளு மற்றும் அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் என்பது பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில், மனச்சோர்வு மற்றும் பதற்றம் இல்லாதவர்களை பார்ப்பது அரிது. மன நிலையில் ஏற்படும் பாதிப்பு, உடல் ஆரோக்கியத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், மருந்துகள் மற்றும் […]