இலங்கை

இலங்கை – தாயை தாக்கி கொன்ற மகன்… எடுத்த வீபரீத முடிவு!

  • December 16, 2024
  • 0 Comments

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (15) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் 82 வயதுடைய பெண் ஒருவர் அவரது மகனால் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார். பின்னர், மகன் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றதுடன், உடவலவ, குருமடயா பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். சந்தேகநபர் கல்பாய, பல்லேபெத்த பிரதேசத்தில் வசித்து வந்த […]

ஐரோப்பா

தாய்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பயணி!

  • December 16, 2024
  • 0 Comments

தாய்லாந்தில் நடந்த பிரபல பௌர்ணமி விருந்தில் கலந்து கொண்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கென்ட்டின் கில்லிங்ஹாமைச் சேர்ந்த 37 வயதான கிறிஸ்டோபர் ஸ்டீபன் பௌச்சர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் தனது ஹோட்டலுக்கு சென்றுக்கொண்டிருந்தபோது பணம் எடுப்பதற்காக ஏடிஎம் இயந்திரத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் உயிரற்ற நிலையில் இன்று (16.12) காலை இனங்காணப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

ஐரோப்பா

சிரியாவிற்கு உணவு வழங்குவதற்கான பொறிமுறையை அமைக்கும் உக்ரைன் : ஜெலென்ஸ்கி

சிரியாவிற்கு உணவு வழங்குவதற்கான பொறிமுறையை அமைக்கும் உக்ரைன் : ஜெலென்ஸ்கி ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிரியாவிற்கு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு உணவு வழங்குவதற்கான விநியோக வழிமுறைகளை அமைக்குமாறு தனது அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் உலகின் சிறந்த தானிய மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது, மேலும் கோதுமை மற்றும் சோளத்தை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது, ஆனால் சிரியாவிற்கு அல்ல. […]

பொழுதுபோக்கு

வெளியேறிய தர்ஷிகா…. விஷாலுக்கு கொடுத்த காதல் பரிசு என்ன தெரியுமா?

  • December 16, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, சுமார் 70 நாட்களை கடந்து விட்டது . 100 நாட்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த போட்டி முடிவுக்கு வர இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கடந்த இரண்டு வாரமாக டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஆர் ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து […]

இலங்கை

இலங்கை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் கடனட்டை பயன்பாடு!

  • December 16, 2024
  • 0 Comments

இலங்கை மக்கள் மத்தியில் கடன் அட்டையின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இவ்வருடத்தின் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் நாட்டில், 1,936,336 கடன் அட்டைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. இதன்படி, செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒக்டோபர் மாதம் பயன்பாட்டில் உள்ள கடனட்டைகளின் எண்ணிக்கை 6,653ஆல் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,917,085 ஆக காணப்பட்டது. அதன்படி, நாட்டின் 10 மாத […]

வாழ்வியல்

முகம் பொலிவின்றி அவதியுறுக்கின்ரீகளா? அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தா

பனிக் காலத்தில், உடலில் ஒருவித வறட்சித் தன்மை ஏற்படும். அதிகப்படியான குளிரால், பலருக்கும் சருமம் வறண்டு, முகம் பொலிவின்றி காட்சியளிக்கும். இச்சமயத்தில், நம் முகத்தின் மிருது தன்மை குறையாமல் பாதுகாக்க சில டிப்ஸ், ‘பிரஷ்’ ஆன காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, அதிக நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். ஆப்பிள், ஸ்ட்ரா பெர்ரி போன்றவற்றுடன் பிரக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்க்க, சருமம் வறண்டு […]

செய்தி

பிரான்ஸின் ஏழ்மையான தீவை தாக்கிய சூறாவளி : ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

  • December 16, 2024
  • 0 Comments

பிரான்ஸின் மயோடே தீவில் வீசிய சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயரத்தை அண்மித்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ள மயோட் பகுதி பிரான்ஸின் ஏழ்மையான தீவுப் பகுதியாகும். சேரிகளின் அழிவு நிலையை பார்க்கும்போது இறப்பு எண்ணிக்கையை உறுதியாக கூற முடியாது எனவும், எவ்வாறாயினும் குறைந்தபட்சம் ஆயிரம் பேர்வரையில் உயிரிழந்திருக்கலாம் என ஊகிப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு உள்துறை மந்திரி புருனோ ரீடெய்லியோ அவசர கூட்டத்தை தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் […]

இலங்கை

ஜார்ஜியாவில் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் பறிபோன உயிர்கள்!

  • December 16, 2024
  • 0 Comments

ஜார்ஜியாவில் உள்ள ரிசாட் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு விஷம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை பரிசோதனை செய்ததில் உடல்களில் வன்முறையின் எந்த தடயமும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அந்த உணவகத்தின் ஊழியர்களாக இருக்கலாம் என ஜார்ஜிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மரணம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஆசியா

ஆசிய மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி ; 2026ம் ஆண்டு ஜப்பானில் தொடங்கவுள்ள புதிய திட்டம்

  • December 16, 2024
  • 0 Comments

புதிய திட்டம் ஒன்றின்கீழ் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் வருங்காலத்தில் ஜப்பானில் இலவசமாக மருத்துவக் கல்வி மேற்கொள்ளக்கூடும். ஜப்பானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வி பயிலும் சில அனைத்துலக மாணவர்களுக்கான பாடக் கட்டணங்கள், வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள அந்நாட்டின் சுகாதார, தொழில், நலன் அமைச்சு திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சு முதன்முறையாக இத்தகைய திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அனைத்துலக சமூகத்துக்குப் பங்காற்றுவதும் ஜப்பானிய மருத்துவக் கருவிகள், மருந்துகள் ஆகியவற்றை ஆசியாவில் பயன்படுத்த […]

பொழுதுபோக்கு

மாமனான சூரி.. வெளியான அடுத்த பட அப்டேட்…

  • December 16, 2024
  • 0 Comments

சூரி நடிக்கும் படங்கள் அனைத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில், அவரது விடுதலை 2 படத்தை மிகுந்த எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி நடிப்பில் வெளியான கருடன் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் 100 கோடியை கடந்தது. இது இவருக்கு கிடைத்த மாபெரும் Opening-ஆகவே பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் இவர் நடிப்பில் வெளியான கொட்டுக்காலி படமும் நல்ல விமர்சனத்தை பெற்றது. […]