ஐரோப்பா

பிரித்தானியாவில் A61 சாலையில் விபத்துக்குள்ளான விமானம் : போக்குவரத்து பாதிப்பு!

  • September 1, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகரின் வடக்கே ஷீப் பிரிட்ஜ் லேனில், A61 க்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர், மீட்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலகம்

கிரேக்கத்திலிருந்து விலங்குகளை சட்டவிரோதமாக கடத்திய நபர் கைது

கிரேக்க எல்லைக்கு அருகில் உள்ள நகரமான எடிர்னில் துருக்கிய சுங்க அதிகாரிகள் , கிரேக்கத்திலிருந்து ஏராளமான அயல்நாட்டு விலங்குகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர் அரசு நடத்தும் அனடோலு ஏஜென்சியின் கூற்றுப்படி, கிரேக்க உரிமத் தகடுகளைக் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான செடான் பல்வேறு பாதுகாக்கப்பட்ட இனங்களைக் கொண்டு சென்றது . அந்த வாகனத்தில் மூன்று கங்காருக்கள், மூன்று அல்பகாக்கள், ஒரு படகோனியன் மாரா, 12 கிளிகள் மற்றும் 23 பறக்கும் அணில்கள் இருந்தன. […]

இலங்கை

இலங்கை – யாழ்ப்பாணத்தில் தனது அரசியல் செயற்பாடுகளை நிறுத்திய நாமல்!

  • September 1, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், நல்லூர் தேர் திருவிழா முடியும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளேன். யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் ஆலயத்தின் கலாச்சார முக்கியத்துவத்தை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய புனிதமான காலத்தில் இந்த மரபுகளை மதிப்பதும் பாதுகாப்பதும் முக்கியம் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு

காஸாவில் 6 பேரின் உடல் மீட்பு: நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு

  • September 1, 2024
  • 0 Comments

கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்ட பிணைக்கைதிகளில் 6 பேரின் உடலை தெற்கு காசா பகுதியின் ரஃபாவில் உள்ள சுரங்கத்தில் இருந்து மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “உயிரிழந்தவர்கள், கார்மல் கட், ஈடன் எருசலாமி, ஹெர்ஸ் கோல்ட்பெர்க் – போலின், அலெக்ஸாண்டர் லோபனோவ், அல்மோக் சருசி மற்றும் ஒரி டேனியோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. எங்களின் ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி, நாங்கள் அங்கு சென்று சேர்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஹமாஸ் படையினர் அவர்களை கொடூரமாக […]

இலங்கை

இலங்கை: லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உலக சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் Litro உள்நாட்டு LP எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என Litro Gas இன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஆனால், மக்கள் நட்பு நிறுவனம் என்ற வகையில், உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். உலகச் சந்தையில் விலை குறைவாக இருந்தபோது வாங்கப்பட்ட பஃபர் […]

இலங்கை

இன்றய தினம் சிவப்பு நிறத்தில் ஒளிரவுள்ள கொழும்பு தாமரை கோபுரம்

  • September 1, 2024
  • 0 Comments

உலக அல்சைமர் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கொழும்பு தாமரை கோபுரம் இன்று முதலாம் திகதி சிவப்பு நிறத்தில் ஒளிரும் என அதன் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. டிமென்ஷியா நோயாகக் கருதப்படும் அல்சைமர் நோயின் மீது உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செப்டம்பர் மாதத்தை அல்சைமர் மாதமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது. அல்சைமர் நோய் அறிகுறிகள் தொடர்பில் கவனம் செலுத்த உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி நோய் மிகவும் […]

ஆசியா

வங்கதேசத்தில் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு ; இதுவரை 59 பே்ர் பலி!

  • September 1, 2024
  • 0 Comments

வங்காளதேசத்தில் 2 வாரங்களாக பெய்து வரும் பருவமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. மின் விநியோகம் பாதிப்பு, சாலை இணைப்பு துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில், சிக்கி 59 பேர் வரை பலியாகி உள்ளார்கள். இதில் அதிக அளவாக பெனி மாவட்டத்தில் 23 பேரும், கமில்லா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்து உள்ளனர். 14 பேரும் உயிரிழந்து உள்ளனர். […]

ஆசியா

ஜப்பானில் தனிமையில் வாடும் முதியவர்கள் : 37 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

  • September 1, 2024
  • 0 Comments

ஜப்பானில் முதியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பலர் தனிமையில் வாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வாறு தனிமையில் வாடுபவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மாத்திரம்  37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய போலீஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இப்படி உயிரிழந்தவர்களில் 65 […]

ஐரோப்பா

உக்ரேனின் ஆளில்லா வானூர்திகள் ஐந்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

  • September 1, 2024
  • 0 Comments

உக்ரேன் அனுப்பிய ஐந்து ஆளில்லா வானூர்திகளை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறினர். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த இரவு நேரத்தில் உக்ரேன் அந்த ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாக அறியப்படுகிறது. ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்ட இடங்களில் ரஷ்ய அவசரநிலைப் பிரிவு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் பல […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 1, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் சர்ரேயில் உள்ள ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்டெயின்ஸ்-அப்-தேம்ஸ், ப்ரெமர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் இறந்ததற்கான சூழ்நிலையை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக சர்ரே போலீசார் தெரிவித்தனர்.