மணிக்கு 1,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயில்: சீனா வெற்றிகரமாக சோதனை
சீன அரசு அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்கென்று 2 கி.மீ தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கியது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அதிகவேக ரயில் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த அதிகவேக ரயில் மாக்லேவ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படக் கூடியது. இந்த ரயிலின் சக்கரம் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது.இதனால், இந்த ரயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது 2 கி.மீ வழித்தடத்தில் […]













