ஐரோப்பா

பிரித்தானியாவில் உலகிலேயே முதன்முறையாக ட்ரோன்களுக்கான பிரத்யேக விமான நெடுஞ்சாலை

  • April 1, 2024
  • 0 Comments

உலகிலேயே முதன்முறையாக ட்ரோன்களுக்கான பிரத்யேக விமான நெடுஞ்சாலையை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இது திறக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆல்டிடியூட் ஏஞ்சல் என்ற நிறுவனத்தால் இது வடிவமைக்கப்பட்டது, இது ட்ரோன்களுக்கான மென்பொருளை வழங்குகிறது, மேலும் இது கோவென்ட்ரி மற்றும் மில்டன் கெய்ன்ஸ் நகரங்களை இணைக்கும் வகையில் 165 மைல்கள் வரை இயங்கும். இந்த வான்வெளியில் ஆளில்லா விமானங்களை பாதுகாப்பாக பறக்கவிட முடியும் என்றும், விமானத்தை பறக்க மனித விமானிகள் தேவையில்லை என்றும் […]

செய்தி

பிரான்ஸில் பூங்கா ஒன்றிற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 1, 2024
  • 0 Comments

பிரான்ஸில் பூங்கா ஒன்றிற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்ச பிரான்ஸில் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வெள்ளிக்கிழமை1 Parc de Sceaux பூங்காவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கு மரம் ஒன்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் ஒரு சடலத்தை பார்வையிட்டுள்ளனர். பிற்பகல் 1.20 மணி அளவில் சடலம் பார்வையிட்டதை அடுத்து, உடனடியாக மருத்துவக்குழுவினர் எச்சரிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் குறித்த சடலத்தை மீட்டனர். […]

ஐரோப்பா

ஈஸ்டர் செய்தியில் பாப்பரசர் விடுத்த கோரிக்கை

  • April 1, 2024
  • 0 Comments

புனித திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் அவர்கள் தனது பாரம்பரிய ஈஸ்டர் செய்தியை நேற்று காசா மக்களுக்கு அர்ப்பணித்தார். அந்த செய்தியில், காசா பகுதியில் போர் நிறுத்தத்தை கொண்டு வருவதற்கு பொறுப்பான தரப்பினருக்கு அழைப்பு விடுப்பதாக அவர் கூறினார். ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைதி என்பது ஆயுதங்களால் உருவாக்கப்படுவதில்லை என்பதை புனித திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.

இலங்கை செய்தி

இலங்கையில் குற்றங்களை தடுக்க களமிறங்கும் மோட்டார் சைக்கிள் குழுக்கள்

  • April 1, 2024
  • 0 Comments

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக சுமார் 100 அதிகாரிகளைக் கொண்ட பல மோட்டார் சைக்கிள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேல் மாகாணம் மற்றும் காலி மாவட்டத்திற்கு இந்த பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய 20 விசேட பொலிஸ் குழுக்கள் […]