வட அமெரிக்கா

போர் அச்சம் – சரிந்தது அமெரிக்க பங்கு விலைகள்

  • April 13, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைய கூடும் என்ற அச்சம் Wall Street பங்குச் சந்தையில் எதிரொலித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. Dow Jones தொழிலியல் குறியீடு 475 புள்ளிகள் குறைந்தது. ஒக்டோபருக்குப் பிறகு Wall Street பங்குகளின் மோசமான வீழ்ச்சி இதுவாகும். வார இறுதிக்குமுன் வந்திருக்கும் புதிய உலக அரசியல் பதற்றம் பங்குகளின் விற்பனைக்குக் காரணமாக அமைந்ததாக Briefing.com கூறியது. அரச தந்திரப் பாதுகாப்பை மீறி இஸ்ரேல் ஈரானியத் துணைத் தூதரகத்தைத் தாக்கியதால் ஈரான் பதிலடி தரும் என்ற […]

உலகம் செய்தி

இதய நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய புதிய நடவடிக்கை – ஆய்வில் வெளியான தகவல்

  • April 13, 2024
  • 0 Comments

ஒரு நாளைக்கு குறைந்தது 5 நிமிடங்களாவது இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது இதய நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. அதன்படி, உட்காருவதை விட தூங்குவதும் நிற்பதும் இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து நாடுகளைச் சேர்ந்த 15,246 பேரைப் பயன்படுத்தி, 6 செயல்பாடுகளின் கீழ் ஒரு நாளில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு அசைவு தோரணைகள் மூலம் இதய ஆரோக்கியத்தின் மீதான தாக்கம் கண்டறியப்பட்டது. தினசரி ஓட்டம், விறுவிறுப்பான நடைப்பயிற்சி, படிக்கட்டுகளில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இளைஞர்கள் மீது கத்திக்குத்து – ஒருவர் பலி – ஒருவர் கவலைக்கிடம்

  • April 13, 2024
  • 0 Comments

மேற்கு சிட்னியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு வெளியே இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் கொண்ட சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் பவர் ஸ்ட்ரீட்டில் உள்ள டூன்சைட் ஹை ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜிக்கு அருகில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக காவல்துறை அவசர சிகிச்சை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. காயமடைந்த […]

அறிந்திருக்க வேண்டியவை

வெப்ப அலையால் காத்திருக்கும் ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

  • April 13, 2024
  • 0 Comments

கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் புவிவெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை ஐ.நா சபை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால், அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்களில் வெளியேறும் புகை உள்ளிட்டவைகளின் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து அதன் மூலம் புவி வெப்பமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட […]

ஆப்பிரிக்கா

கொலம்பியாவின் 10 மில்லியன் மக்கள் பாதிப்பு – கடும் வறட்சியால் நெருக்கடி

  • April 13, 2024
  • 0 Comments

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைநகரில் சுமார் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய நிலைமை மேலும் மோசமாகும் என பொகோட்டாவின் மேயர் எச்சரித்துள்ளார். அதன்படி கொலம்பியாவின் தலைநகர் 09 பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழமைக்கு மாறாக வறண்ட காலநிலை காரணமாக தலைநகரில் வசிப்பவர்களுக்கு ஒரு துளி தண்ணீரை கூட வீணாக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் விடுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கையடக்க தொலைபேசி வாங்க காத்திருப்பவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவை!

  • April 13, 2024
  • 0 Comments

நாம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் நீண்ட நாட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்து கொண்டே நாம் போன் வாங்குவோம். அப்படி வாங்கும் ஐ ஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் எல்லாம் உண்மையாகவே புதிய போன் தானா என்று நாம் இந்த பதிப்பில் பார்ப்போம். ஷோரூம் அல்லது சாதாரண மொபைல் கடைகளில் குறைந்த விலைக்கு ஐபோன் கிடைக்கும் என்று விற்று வருகிறார்கள். ஆனால் அது நமக்கு ரசிது அதாவது பில் இல்லாமல் கிடைக்கும் என […]

செய்தி

மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

  • April 13, 2024
  • 0 Comments

ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், அங்கு வாழும் அமெரிக்கர்கள் தங்களது பயண நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜெரூசலம், டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா பகுதிகளுக்கு வெளியே பயணிக்க வேண்டாம் என அமெரிக்கா தங்களது நாட்டு பிரஜைகளைக் கோரியுள்ளது. 11 நாட்களுக்கு முன்னர் சிரியாவில் உள்ள தங்களது தூதரகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் பலியானமைக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி – பொலிஸார் அதிரடி நடவடிக்கை

  • April 13, 2024
  • 0 Comments

பிரான்ஸின் தென்மேற்கு நகரமான Bordeaux இல் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Garonne ஆற்றங்கரையருகே மாலை 7.30 மணி அளவில் நடந்து சென்ற இருவர் மீது ஆயுததாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இறைச்சி வெட்டும் கூரான கத்தி ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து ஆயுதத்துடன் தப்பிச் செல்ல முற்பட்டவேளையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பாடசாலை கற்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • April 13, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பாடசாலை கற்கையில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதற்கைமைய, ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு மேலதிகமாக உயர் கல்வி பாடம் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேலதிகமா ஒரு பாடம் ஒன்று சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தினுடைய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது அபுடு என்று சொல்லப்படுகின்ற கா பொ த உயர் தர பரீட்சைக்கு தற்பொழுது […]

இலங்கை செய்தி

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

  • April 13, 2024
  • 0 Comments

இலங்கையில் புத்தாண்டு காலத்தில் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர்நல வைத்தியர் தீபால் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சிறுவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்கும் போது அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், அவ்வாறான நோய்தொற்று காணப்படுமாயின் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.