மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் சூடானில் நடந்திருக்கலாம் – ஐ.நா
சூடானில் பொதுமக்களுக்கு எதிரான கண்மூடித்தனமான தாக்குதல்கள் “போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக” அமையலாம் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். சூடான் ஆயுதப் படைகளுக்கும் (SAF) துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே நடந்த போருக்கு மத்தியில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள், அதாவது சூடானின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு உதவி தேவை என்றும், சுமார் 8 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் ஐக்கிய நாடுகள் […]













