ஐரோப்பா

பிரான்சில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை : புதிய திட்டங்கள் அறிவிப்பு!

  • February 1, 2024
  • 0 Comments

குறைந்த ஊதியம், அதிக கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நியாயமற்ற போட்டி ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் பல நாட்களாக போராட்டம் நீட்டித்து வருகின்ற நிலையில், விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய நடவடிக்கைகளை பிரான்சின் பிரதம மந்திரி இன்று (01.02) அறிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் கனரக டிராக்டர்களை ஓட்டிக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலைகளை மறித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கேப்ரியல் அட்டல்,  ஐரோப்பிய […]

இந்தியா

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்த கணவன்!

  • February 1, 2024
  • 0 Comments

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுக்குள் கணவனே சிறைவைத்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள எச்.டி.கோட் தாலுகா எச்.மாடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனலயா. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எச்.டி கோட் கிராமத்தைச் சேர்ந்த சுமா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.அவரை திருமணம் செய்த நாளில் இருந்து சுமாவின் நடத்தை மீது சுனலயா சந்தேகம் கொண்டார். இதன் காரணமாக ஒரு அறையில் சுமாவை வைத்து பூட்டி 3 […]

உலகம்

5000 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையங்களை கட்டும் ஈரான்!

  • February 1, 2024
  • 0 Comments

ஈரான் 5000 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அணுமின் நிலையங்களை கட்ட ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2041க்குள் 20,000 மெகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்ய ஈரான் முயற்சிக்கிறது. 2011 ஆம் ஆண்டு ரஷ்யாவின் உதவியோடு 1,000 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஈராக்கின் மேற்கு எல்லைக்கு அருகில் உள்ள எண்ணெய் வளம் மிக்க குசெஸ்தான் மாகாணத்தில் 300 மெகாவாட் ஆலையை உருவாக்குகிறது. ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கடந்த ஆண்டு […]

உலகம்

நேட்டோ உறுப்புரிமை :ஹங்கேரி மற்றும் ஸ்வீடிஷ் பிரதமர் இடையே முக்கிய சந்திப்பு

ஸ்வீடன் பிரதம மந்திரி உல்ஃப் கிறிஸ்டெர்சன் , ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பனை இன்று முதல் முறையாக பிரஸ்ஸல்ஸில் சந்திக்க உள்ளார் . உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு 2022 இல் ஸ்வீடன், பின்லாந்துடன் இணைந்து கூட்டணியில் சேர விண்ணப்பித்தது. இந்நிலையில் பின்லாந்து கடந்த ஆண்டு கூட்டணியின் 31வது உறுப்பினரானது, ஆனால் இதுவரை துருக்கியும் ஹங்கேரியும் ஸ்வீடனின் விண்ணப்பத்தைத் தடுத்திருந்தன. துருக்கி தனது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்வீடனின் நேட்டோ உறுப்பினருக்கு கடந்த வாரம் பச்சை விளக்கு […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் தற்போதைய பணவீக்க நிலைமை : வாக்கெடுப்பும் கோரப்பட்டது!

  • February 1, 2024
  • 0 Comments

இங்கிலாந்தின் வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இங்கிலாந்து வட்டி விகிதங்கள் 5.25% சதவீதமாக காணப்படுகிறது. இங்கிலாந்தின் வட்டி விகிதங்கள் இத்துடன் நான்காவது முறையாக மாற்றமடைந்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்காக இதற்கு முன் 14 முறை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. வங்கியின் குழு வட்டி விகிதத்தை நிலையாக வைத்திருப்பதற்கு ஆதரவாக 6-3 என வாக்களி்த்தது. வாக்களிப்பில் பங்கேற்ற இருவர் அதிகரிக்க வேண்டும் என்றும் ஒருவர் குறைக்க வேண்டும் எனவும் வாக்களித்தார். ஆகஸ்டில் நிர்ணயிக்கப்பட்ட […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு 50 பில்லியன் யூரோக்கள் ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கேல் , உக்ரைனுக்கு 50 பில்லியன் யூரோக்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் . ஐரோப்பிய ஒன்றிய 27 உறுப்பு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பிரஸ்ஸல்ஸில் கூடியிருந்த தலைவர்களுக்கு வீடியோ உரையில், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கெய்விற்கு நீண்டகால நிதியுதவி தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இராணுவ உதவியை அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை

இன்றுடன் நிறைவடைந்த 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக பலமுறை ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, கடைசியாக ஜனவரியில் நடந்த சர்ச்சைக்குரிய விவசாய அறிவியல் தாள் கசிவு காரணமாக மீண்டும் பரீட்சை நடைப்பெற்றது. உயர்தர விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் தயாராகி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் கடந்த வருடத்தின் அதே கொடுப்பனவைப் பெறுவார்கள். ஒரு சில மாதங்களில் மதிப்பெண்களை முடித்து முடிவுகளை வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான மூன்றாம் பள்ளி […]

இலங்கை

அந்நியனாகவும், அம்பியாகவும் மாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க : சாணக்கியன் விமர்சனம்!

  • February 1, 2024
  • 0 Comments

அதிகாரம் இருக்கும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்நியனாக மாறுவதுடன் ஆட்சியதிகாரம் இல்லாவிட்டால் அம்பியாக மாறுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் உள்ள ஹேமியோபதி வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (01.02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மேற்படி குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகரசபையின் கட்டிடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கிவரும் ஹேமியோபதி வைத்தியசாலைக்கு உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக […]

இலங்கை

கெஹலிய கோ கம : கைது செய்யப்பட்ட 10 சிவில் செயற்பாட்டாளர்களுக்கு பிணை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போதைய சுற்றாடல் அமைச்சருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை (2ம் திகதி) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆசியா

செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : இத்தாலியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் அபாயம்

யேமனின் ஹவுதிகளின் தாக்குதல்களால் செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது இத்தாலியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சூயஸ் கால்வாய் வழியாக இத்தாலிக்கு செல்லும் போக்குவரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுளளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில், இந்த நிலைமை தொடர்வது மத்தியதரைக் கடலில் உள்ள துறைமுகங்கள் ஓரங்கட்டப்படுவதற்கு வழிவகுக்கும். இது வழிசெலுத்தலின் பாதுகாப்பை மட்டுமல்ல இத்தாலியின் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுளளது.