இலங்கை

இலங்கையில் பொருளாதாரத்தை மீட்க வேறு வழியில்லை – ரணில் விக்கிரமசிங்க!

  • January 3, 2024
  • 0 Comments

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பாதையை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சலுகைகளை வழங்க முடியும் என கூறுபவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (03.01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இக்கட்டான காலத்திலும் நாங்கள் எங்கள் வருமானத்தை அதிகரித்தோம். இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 2% ஆக இருக்கும் என்று […]

ஐரோப்பா

ரஷ்யாவின் மிகப்பெரிய வைர நிறுவனத்தையும் தலைமை நிர்வாக அதிகாரியையும் தடைகள் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியம்

ரஷ்யா அரசு நடத்தும் வைர நிறுவனமான அல்ரோசா மற்றும் அதன் தலைமை நிர்வாகி மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது . டிசம்பரில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வைரங்களை தடை செய்ய ஒப்புக்கொண்டது , 27 உறுப்பினர்களைக் கொண்ட குழு, உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்க நிறுவனமான அல்ரோசா மற்றும் அதன் முதலாளி பாவெல் மரினிச்சேவ் ஆகியோரை ஒரு தடுப்புப்பட்டியலில் சேர்த்தது, இது விசா தடை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சொத்து முடக்கத்திற்கு உட்பட்டது. […]

பொழுதுபோக்கு

GOAT படத்தில் பிரசாந்த் லுக்… ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

  • January 3, 2024
  • 0 Comments

விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் என படக்குழு அறிவித்திருந்தது. நியூ இயர் ஸ்பெஷலாக இரண்டு போஸ்டர்களுடன் GOAT டைட்டில் வெளியானது. இந்தப் படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா போன்ற சீனியர் நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான போட்டோ வைரலாகி வருகிறது. விஜய்யுடன் மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணியே GOAT படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி, […]

ஆசியா

தென்னாப்பிரிக்காவை எதிர்க்கத் தயார்: இஸ்ரேல் அறிவிப்பு

சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்க்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருவதாக சர்வதேச நீதி மன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்திருந்தது. சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறுவதாக குற்றம் சாட்டிய தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் காஸா மீதான தாக்குதல்களை நிறுத்த ஆணை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தது. வரும் ஜனவரி 11 மற்றும் 12-ல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கவனத்தை ஈர்த்த இலங்கை கிரிகெட் வீரர்!

  • January 3, 2024
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக நான்கு பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அந்த வீரர்களில் இலங்கையின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து  ரச்சின் ரவீந்திரா – நியூசிலாந்து ஜெரால்ட் கோட்ஸி – தென்னாப்பிரிக்கா யஷஷ்வி ஜெய்ஷ்வால் – இந்தியா ஆகிய வீரர்களின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கை

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

  • January 3, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நீதி காவற்துறை நடவடிக்கையின் கீழ் நேற்று (02) முதல் இன்று (03) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 சந்தேகநபர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் போதைக்கு அடிமையான 47 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த […]

அறிந்திருக்க வேண்டியவை

சூரியனுக்கு மிக அருகில் பூமி: நிகழப்போவது என்ன?

சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதை சரியாக வட்டமாக இல்லை. மாறாக, அது சற்று நீள்வட்டமாக உள்ளது. இதன் பொருள் கிரகத்திற்கும் நட்சத்திரத்திற்கும் இடையிலான தூரம் ஆண்டு முழுவதும் சுமார் மூன்று சதவீதம் மாறுபடும் சூரியனை நீள்வட்டப் பாதையில் பூமி சுற்றி வருவதால், குறைந்த விட்டமுடைய வட்டப்பாதையில் பூமி பயணிக்கும்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் குறைந்து மிக அருகில் சூரியன் தென்படும். இதனை பெரிஹேலியன் தினம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெரிஹேலியன் நாள் என்பது வருடாந்திர சுற்றுப்பாதையில் […]

ஆசியா

மீண்டும் ஆப்கானிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட நிலநடுக்கம்

  • January 3, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காபூல் அருகே 29 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று நள்ளிரவில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பைசாபாத் அருகே ஏற்பட்ட இந்த […]

இலங்கை

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு பொதியில் வந்த 6 கோடி பெறுமதியான போதைப்பொருள்

  • January 3, 2024
  • 0 Comments

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் உள்ள பொருட்களை அகற்றும் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதியில், போதைப்பொருள் இருந்ததை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார். உணவாக அறிவிக்கப்பட்ட அந்த பொதியில் 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான 4 கிலோ 91 கிராம் […]

இந்தியா

ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!! மது அருந்தி புத்தாண்டு கொண்டாடிய 7ம் வகுப்பு மாணவர்கள் – இணையத்தில் வைரலான வீடியோ

  • January 3, 2024
  • 0 Comments

ஆந்திராவில் 7ம் வகுப்பு மாணவர்கள் மது அருந்தி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோடவரம் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்திலேயே அரசு விடுதியும் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், கடந்த 31ம் திகதி இரவு புத்தாண்டு கொண்டாட […]