இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மத்திய அரசு தலையிடாது : ஜனாதிபதி ரணில் உறுதி!
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவும், அதற்கு மத்திய அரசாங்கம் தலையிடாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், அதிகாரப் பகிர்வு என்பது வெறும் அரசியல் கருத்தாக இருக்கக் கூடாது, பொருளாதார யதார்த்தமாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் இருந்து மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்து கற்றுக் கொள்ளுமாறு கோரிய […]













