இந்தியா

விமானத்தில் கழிப்பறையில் சிக்கிய பயணி..!

இந்தியாவின் மும்பையில் இருந்து பெங்களூர் நோக்கி பயணித்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில், பயணி ஒருவர் கழிப்பறையில் சிக்கியுள்ளார். குறித்த பயணி விமானத்தின் கழிப்பறைக்குச் சென்றபோது, அதன் கதவு திறக்க முடியாதபடி சிக்கிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பயணி கழிப்பறையில் இருந்தவாறே1 மணித்தியாலமும் 50 நிமிடங்களும் பயணித்துள்ளார். பணியாளர்களும் மற்ற பயணிகளும் வெளியில் இருந்து கதவைத் திறக்க உதவ முயன்றனர், ஆனால் அவர்களது முயற்சிகள் தோல்வியடைந்தன. பின்னர் பெங்களூரில் விமானம் தரையிறங்கியதும் பயணியை மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

ஐரோப்பா

கார்கிவ் மீது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்: 17 பேர் படுகாயம்

உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் என்ற இடத்தில் ரஷ்யா இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீதான இரவு நேரத் தாக்குதலில், 20 குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் மருத்துவ மையம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தின் மையத்தில் இரண்டு S-300 ஏவுகணைகள் கட்டிடங்களைத் தாக்கியதாகவும், 14 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் பிராந்திய ஆளுநர் Oleh Syniehubov தெரிவித்தார். “இரண்டு […]

இலங்கை

துமிந்தவின் ஜனாதிபதி மன்னிப்பை செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு- எம்.ஏ.சுமந்திரன்

  • January 17, 2024
  • 0 Comments

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்றையதினம் (17) முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்திருந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாரதலக்ஸ்மன் […]

இலங்கை

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு : இலங்கை கிழக்கு மாகாண ஆளுனரின் காளை வெற்றி

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளை வெற்றி பெற்றுள்ளது. அலங்கா நல்லூரில் அமைச்சர் மூர்த்தியால் ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியில் வெற்றிபெற்ற செந்தில் தொண்டமானின் காளைக்கு தங்க நாணயத்தை பரிசாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.  

இலங்கை

இலங்கை : எதிர்காலத்திலும் மரக்கறிகளின் விலை அதிகரித்தே காணப்படும்!

  • January 17, 2024
  • 0 Comments

கடும் மழையினால் நுவரெலியாவில் பல மரக்கறிப் பண்ணைகள் சேதமடைந்துள்ளதால் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் உயர்வாகவே இருக்கும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. சந்தையில் ஒரு கிலோகிராம் கேரட்டின் மொத்த விலை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரித்துள்ள பின்னணியில் நுவரெலியாவில் விவசாயிகள் தமது பயிர்களை விவசாய வயல்களில் இருந்தே குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை காணமுடிந்தது. இன்று மேலும் விலை அதிகரித்துள்ள நிலையில், நேற்று 1,500 முதல் 2,000 ரூபா வரையில் […]

ஐரோப்பா

15 வயது மாணவனுடன் உல்லாசம்… பிரிட்டன் ஆசிரியைக்கு வாழ்நாள் தடை

  • January 17, 2024
  • 0 Comments

பிரிட்டனில் மாணவனுடன் நெருங்கி பழகி அவனுடன் உடலுறவு கொண்ட ஆசிரியைக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் பக்கிங்காம்ஷைர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தவர் கேண்டிஸ் பார்பர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர் தன்னிடம் படித்த 15 வயது மாணவனுக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியும், ஆபாசமான வார்த்தைகள் கொண்ட மெசேஜ் அனுப்பியும் ஆசையை தூண்டி மயக்கியிருக்கிறார்.அதன் பின்னர் அந்த மாணவனை தனியாக வயல்வெளிக்கு அழைத்துச் சென்று அவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். கடந்த […]

இந்தியா

காணும் பொங்கல் : கோவை குற்றாலத்தில் குவிந்த மக்கள்!

  • January 17, 2024
  • 0 Comments

காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். தமிழகம் முழுவதும் 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையும் 17ஆம் தேதி மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது பாரம்பரிய வழக்கம். இந்த நாளில் நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் நேரத்தை செலவிடுவர். அந்த வகையில் காணும் பொங்கல் […]

இந்தியா

அயோத்தியில் குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு ஐபோனை கொடுத்த குரங்கு…! (வைரலாகும் வீடியோ)

  • January 17, 2024
  • 0 Comments

ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக விழாக்கோலம் பூண்டுவரும் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் பக்தரிடம் இருந்து குரங்கு ஒன்று ஐபோனை தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது மதுரா நகரம். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதன் அருகிலேயே யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது பிருந்தாவனம். இங்கு கிருஷ்ணன் தனது இளமைப் பருவத்தைக் கழித்ததாகவும், பல லீலைகள் செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இதுவும் திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக, பிருந்தாவனத்தில் எப்போதும் பக்தர்களின் […]

இலங்கை

காலநிலை செழிப்பு திட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி அழைப்பு!

  • January 17, 2024
  • 0 Comments

காலநிலை செழிப்புத் திட்டங்கள் என்பது காலநிலை பாதுகாப்பற்ற உலகில் செழுமைப்படுத்துவதற்கான ஒரு உத்தி மாத்திரமல்ல, பூஜ்ஜிய கரியமில உலகில் வெற்றியாளர்களாக மாறுவதற்கான நிகழ்ச்சி நிரலாகவும் மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் காலநிலை பாதிப்புக்குள்ளானோர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். காலநிலை மாற்றத்தின் தாக்கங்களினால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நிதி வெளி தொடர்ந்து அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகப் பொருளாதார […]

ஆசியா

அரச குடும்பத்திற்கு எதிராக கருத்து… சட்டத்தரணிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

  • January 17, 2024
  • 0 Comments

தாய்லாந்து அரச குடும்பத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த குற்றத்திற்காக ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவரும் சட்டத்தரணி ஒருவருக்கு மேலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் தாய்லாந்து அரச குடும்பம் தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் தற்போது 39 வயதாகும் மனித உரிமைகள் சட்டத்தரணி Arnon Nampa. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்கு பின்னர், 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அவர் தமக்கு […]