இலங்கை

இலங்கையில் மிளகாய் பயிரிட்டு கோடீஸ்வரனான விவசாயி

  • December 19, 2023
  • 0 Comments

அநுராதபுரம் புளியங்குளம் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்று மிளகாய் சாதனையை புதுப்பித்துள்ளார். அதற்கமைய, குறைந்த பயிரிடப்பட்ட நிலத்தில் அதிக வருமானம் ஈட்டிய மிளகாய் விவசாயி என்ற சாதனையில் அவர் இணைந்துள்ளார். விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது. புளியங்குளத்தை சேர்ந்த பந்துல என்பவர் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளார். சந்தையில் தற்போதைய மிளகாய் விலைக்கமைய, குறைந்தபட்சம் […]

விளையாட்டு

இன்று ஐபிஎல் மினி ஏலம் – 77 வீரர்களை தேர்வு

  • December 19, 2023
  • 0 Comments

ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையாக காணலாம். ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 333 வீரர்கள் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 77 வீரர்களை தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் ஏலம் எடுக்க உள்ளன. மொத்தம் […]

இலங்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி – யாசகர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு

  • December 19, 2023
  • 0 Comments

இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நகர சபை மற்றும் மாநகர சபைகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, மேலும் யாசகர்களின் எண்ணிக்கை 3,700 ஐ நெருங்குகிறது. மேல் மாகாணத்தில் மாத்திரம் 1600 யாசகர்கள் இருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட யாசகர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியால் சில நிறுவனங்கள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த சிலர் யாசகர்களாக மாறியிருப்பது இது தொடர்பான கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. […]

உலகம்

அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்.. வடகொரியாவுக்கு எச்சரிக்கை

  • December 19, 2023
  • 0 Comments

வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்டப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளை தாக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதனையிட்டு வருவது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளும், தென்கொரிய அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனர். கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணையை இம்மாதம் வடகொரிய அரசு பரிசோதிக்ககூடும் என […]

பொழுதுபோக்கு

‘என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி’ வைரலாகும் ரஷ்மிகாவின் பதிவு

  • December 19, 2023
  • 0 Comments

நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதித்து விட்டார். சமீபத்தில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்துவரும் அனிமல் படத்தில் இவர் நடித்து இருந்தார். விமர்சனங்களைத் தாண்டி அந்த படம் உலக அளவில் 800 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது. இந்தியாவில் மட்டுமே 500 கோடி வசூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஜோடியாக வெளிநாடு […]

அறிந்திருக்க வேண்டியவை

நம்மை கண்காணிக்கும் மூன்றாவது கண் பற்றி தெரியுமா?

  • December 19, 2023
  • 0 Comments

நீங்கள் எப்போதாவது ஒரு நபரிடம் பேசி முடித்த பிறகு உங்களின் போனை பயன்படுத்தினால், இணையத்தில் நீங்கள் பேசியது தொடர்பான காணொளியோ அல்லது விளம்பரமோ வந்ததைப் பார்த்ததுண்டா? எனக்கு இப்படி ஒரு சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. ஒருமுறை எனது தங்கையிடம் குழந்தைகளுக்கான டைபர் பற்றி போனில் பேசி முடித்ததும், இணையத்தை திறந்தபோது அது சார்ந்த விளம்பரங்கள் எனக்கு வந்தது. இது எப்படி சாத்தியம்? அப்படியானால் நான் என் தங்கையுடன் பேசியதை என்னுடைய ஸ்மார்ட்போன் ஓட்டுக் கேட்கிறதா? நான் டைபர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இனி iPhone தகவல்களைத் திருட முடியாது!

  • December 19, 2023
  • 0 Comments

ஐபோன் பயனர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஐபோன் சாதனங்களில் Stolen Device Protection என்ற புதிய பாதுகாப்பு அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபோன் என்றாலே முதலில் அனைவருக்கும் மனதில் தோன்றுவது அதில் உள்ள பாதுகாப்பு அம்சம்தான். ஆப்பிள் நிறுவனமும், அவர்களின் சாதனங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்ற நம்பிக்கை மூலமாகவே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். இருந்தாலும் சில நேரங்களில் அந்நிறுவன சாதனங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, ஐபோனின் தரவுகளை கொள்ளையர்கள் திருடும் வாய்ப்புள்ளது. […]

இலங்கை

இலங்கையில் அடையாள அட்டைகளுக்கான புகைப்படக் கட்டணத்தில் மாற்றம்!

  • December 19, 2023
  • 0 Comments

அடையாள அட்டை புகைப்படத்திற்கான கட்டணத்தை அதிகரித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகலுக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் புகைப்பட நகல் எடுப்பதற்கு பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் வசூலிக்கப்பட வேண்டிய அதிகபட்ச கட்டணம் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 150 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அடையாள அட்டை அல்லது அடையாள […]

ஆசியா

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம் – 100க்கும் மேற்பட்டோர் பலி

  • December 19, 2023
  • 0 Comments

சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல். திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுடனான விமான சேவைகளை அதிகரிக்க துருக்கி ஏர்லைன்ஸ் திட்டம்

  • December 19, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுடனான விமான சேவைகளை அதிகரிக்க துருக்கி ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமான நிறுவனம் முன்வைத்த முன்மொழிவுக்கு ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, துருக்கி ஏர்லைன்ஸ் 2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவிற்கும் அங்கிருந்தும் வாரந்தோறும் 35 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பெர்த்தில் இருந்து அந்த விமானங்களை இயக்க துருக்கி ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும் ஆஸ்திரேலியாவுக்கான பயண நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தது. ஆனால் […]

error: Content is protected !!