இலங்கை

கில்மிஷாவை பாராட்டிய ஜனாதிபதி ரணில்!

  • December 19, 2023
  • 0 Comments

தென்னிந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுமி கில்மிஷாவை ஜனாதிபதி பாராட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்று காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் […]

ஆசியா

சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

  • December 19, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்க நகைகளை சட்டவிரோத முறையில் இந்திய நாட்டுக்குள் கொண்டுவரும் பயணிகளை கண்காணிக்கும் முயற்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட இந்திய அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அவ்வாறான பயணிகள் குறிப்பிட்ட கட்டணம் பெற்றுகொண்டு சட்டவிரோத முறையில் நகைகளை எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டு சொந்த நாடு திரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய நாட்டிற்குள் தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வளைகுடா நாடுகளின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கும் திருமண முறிவுகள் – நீதிபதிகள் இல்லாமல் கடும் நெருக்கடி நிலை

  • December 19, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் மெக்கலம்பேர்க்போக்ஃவொமன் என்ற மாநிலத்தில் உள்ள நீதிமன்றகளில் நீதிபதிகள் பற்றாக்குறையாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீதிமன்றங்களில் பணியாற்றுகின்ற நீதிபதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான சிவரி ஸ்சுவனில் அமைந்துள்ள நகர நீதிமன்றத்தில் சில வழக்குகள் நிறைவு பெறாத நிலையில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக திருமணம் முறிவு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன் காரணத்தினால் பல ஆண்டுகள் இந்த வழக்குகள் தொடர்ந்தும் காணப்படுவதாக […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஆசிரியருக்கு அதிர்ச்சி கொடுத்த மாணவனுக்கு நேர்ந்த கதி

  • December 19, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கணித ஆசிரியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்லின் நகரில் உள்ள கிறிஸ்தவ பாடசாலையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவருக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளமான Instagram இல், குறித்த ஆசிரியரின் புகைப்படத்தை பதிவேற்றி, ஆங்கிலத்தில் சில தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி, ‘இவரை ஒருவருக்கும் பிடிக்கவில்லை. இவரை நான் தாக்குதல் நடத்தி கொல்லப்போகிறேன்’ எனவும் பகிரப்படுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக குறித்த ஆசிரியர் பொலிஸார் புகார் அளிக்க, விசாரணைகளை […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

  • December 19, 2023
  • 0 Comments

இலங்கையில் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களில் விவாதம் நடந்து வரும் பின்னணியில், பரீட்சையை ஒத்திவைப்பதற்காக மாணவர் குழுவொன்றும் கல்வி அமைச்சின் முன்பாக வந்து கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர். ஆனால், இதுபோன்ற செயல்களை ஆசிரியர்களே செய்கிறார்கள் என்று அமைச்சர் ஒரு விழாவில் கூறினார். பரீட்சை […]

ஐரோப்பா செய்தி

ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களுக்கு ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதிக்க அனுமதி

  • December 18, 2023
  • 0 Comments

ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் LGBT மக்களுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதிக்க பாதிரியார்களை போப் பிரான்சிஸ் அனுமதித்துள்ளார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், சில சூழ்நிலைகளில், ஒரே பாலின மற்றும் “ஒழுங்கற்ற” ஜோடிகளை ஆசீர்வதிக்க பாதிரியார்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்திருந்தார். ஆனால் ஆசீர்வாதங்கள் வழக்கமான தேவாலய சடங்குகள் அல்லது சிவில் யூனியன்கள் அல்லது திருமணங்கள் தொடர்பானதாக இருக்கக்கூடாது என்று வத்திக்கான் கூறியது. அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை தொடர்ந்து […]

ஆசியா செய்தி

AI தொழில்நுட்பம் மூலம் சிறையில் இருந்து பிரச்சாரம் செய்த இம்ரான் கான்

  • December 18, 2023
  • 0 Comments

சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஆடியோ கிளிப்பைப் பயன்படுத்தி ஒரு மெய்நிகர் பேரணியில் உரையாற்றினார். இது தெற்காசிய நாட்டில் இதுபோன்ற முதல் நிகழ்வாகும். இம்ரான் கான் நான்கு நிமிட உரையை வழங்கினார், கிளிப்பைப் பயன்படுத்தி, அவரது AI-உருவாக்கப்பட்ட படம் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய வீடியோவில் இது போடப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இணையதளம் செயலிழந்த போதிலும், அதன் மெய்நிகர் பேரணியானது யூடியூப், பேஸ்புக் மற்றும் […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விஷேட அறிவிப்பு

  • December 18, 2023
  • 0 Comments

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் (19.12.2023) இயங்காது என்பதனை முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு 1 மு/மன்னகண்டல் அ.த.க.பாடசாலை 2 மு/இருட்டுமடு தமிழ் வித்யாலயம் 3 மு/நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு 1.மு/கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலை 2.மு/கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலை 3.மு/முத்துவிநாயகபுரம் மகாவித்தியாலயம் 4.மு/பேராறு அ.த.க.பாடசாலை 5.பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம் (கற்சிலைமடு) ஆகிய பாடசாலைகள் […]

இந்தியா செய்தி

இந்த ஆண்டு 72 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை

  • December 18, 2023
  • 0 Comments

இந்த ஆண்டு அக்டோபர் வரை 7.2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இதனைத் தெரிவித்தார். ரெட்டி 2018 முதல் ஐந்து ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை (FTAs) பற்றிய தரவுகளைப் பகிர்ந்துள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 10.56 மில்லியனாக (2018 இல்), 10.93 மில்லியன் (2019 இல்), 2.74 மில்லியனாக (2020 […]

இலங்கை செய்தி

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கைதானவர்களை சிறையில் சந்தித்த சாணக்கியன்

  • December 18, 2023
  • 0 Comments

மாவீரர் தினத்தன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள மாணவன் உட்பட நான்கு பேரை பிணையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நேற்று முன்தினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியிருந்தார். இதில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரம் பயிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் […]