பொழுதுபோக்கு

தங்கத் தேர் போல நடந்து வந்த ஷிவாஷி நாராயணனைப் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்

  • October 14, 2023
  • 0 Comments

நடிகை ஷிவானி நாராயணன் புடவையில் இருக்கும் அம்சமான அழகைப்பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். திரைத்துறையில் சினிமா நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்குத்தான் இப்போது ஏகப்பட்ட மார்க்கெட். அதிலும் பிரைம் டைமில் ஒரு சீரியலில் நடித்துவிட்டால் போது, விரைவில் பிரபலமாகி விடலாம். அப்படி ஹிட்டான சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ஷிவானி நாராயணன். அழுகு பதுமையாக, அமைதியின் சின்னமாக வந்த ஷிவானியின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கிப்போன ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராம் குயின் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில் கிடைத்த […]

பொழுதுபோக்கு

லியோ திரைப்பட ட்ரெய்லரில் விஜயின் சர்ச்சைக்குரிய வசனம்? புகழ் வெளியிட்ட கருத்து

லியோ திரைப்பட ட்ரெய்லரில் நடிகர் விஜயின் சர்ச்சைக்குரிய வசனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஈ ஸ்பா நிறுவனத்தின் ஐந்தாவது கிளை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பாவை திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது. ”ப்ரொபஷனலாக மசாஜ் செய்வதற்கு தாய்லாந்து செல்ல வேண்டியதில்லை. தமிழ் நாட்டில் “ஈ – ஸ்பாவில்” மிகவும் சிறப்பாக […]

ஐரோப்பா

மாஸ்கோ- வீதிகளில் மலர் செண்டுகளை வைத்து சென்ற பொதுமக்கள்

  • October 14, 2023
  • 0 Comments

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தூதரகங்களுக்கு வந்த பொதுமக்கள் அங்கு மலர் செண்டுகளை வைத்து சென்றனர். இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போரை நிறுத்தும் விதமாக ரஷ்யர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் மாஸ்கோவில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தூதரகங்களுக்கு சென்று அதன் வாயிலில் மலர் செண்டுகளையும், பொம்மைகளையும் வைத்து சமாதானத்தை வலியுறுத்தி வருகின்றனர்.இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை

கொக்குத்தொடுவாயில் காட்டு யானைகள் அட்டகாசம் ; நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் அழித்து நாசம்!

  • October 14, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் மக்களின் வாழ்வாதார பயிரான தென்னை மரங்களை அழித்துள்ளன. நேற்று (13.10.23) இரவு குறித்த கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் தென்னந்தோட்ட செய்கையினையே வாழ்வாதாரமாக மேற்கொண்டுவரும் தெங்கு செய்கையாளர்களின் நூற்றுக்கு மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமத்தில் தெங்கு செய்கையினை மேற்கொண்டுவரும் இராசேந்திரம் மற்றும் சிவலிங்கம் ஆகிய இருவரின் தென்னந்தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் காய்த்து பயன் பெற்றுக்கொண்டிருக்கும் தென்னங்கன்றுகளை அழித்து நாசம் செய்துள்ளன. […]

உலகம்

போலந்தில் கடுமையான பாராளுமன்றப் போட்டி

போலந்தின் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் முக்கிய கட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை இறுதி பிரச்சார பேரணிகளை நடத்தியிருந்தனர். பேரணியின் போது அந்தந்த கட்சிகளுக்கு வெற்றிகரமான ஆதரவை வழங்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கருத்துக் கணிப்புகள் ஒரு நெருக்கமான போட்டியை பரிந்துரைத்தன. நாளை ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை

மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • October 14, 2023
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணக்கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14.10) தெரிவித்துள்ளது. மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதன்படி மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம் என்றும் வீட்டிற்குள் இருக்குமாறும்  எச்சரித்துள்ளது. நெல் வயல்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்த […]

இலங்கை

வெல்லவாயவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேகநபர் கைது

வெல்லவாய பகுதியில் வைத்து 63 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களுடன் நேற்று மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, அனுமதியற்ற இரண்டு 12 போர் துப்பாக்கிகள், 22 தோட்டாக்கள், இரண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள், 9 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், குண்டு துளைக்காத உடல் கவசம் மற்றும் சட்டவிரோத கத்தி ஆகியவை வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளன. புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாமில் கடமையாற்றும் விசேட […]

இலங்கை

இலங்கையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி!

  • October 14, 2023
  • 0 Comments

இணையம்  (Online) மூலம் வேலை வாய்ப்பு தருவதாக தெரிவித்து சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்  கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் 3 வங்கிக் கணக்குகளில் 72 […]

மத்திய கிழக்கு

காசாவில் குறைந்தது 11 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

  • October 14, 2023
  • 0 Comments

காசாவில் நடந்து வரும் மோதல் நிலைமையில் குறைந்தது 11 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் பத்திரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கான குழுத் தெரிவித்துள்ளது. காசாவில் அல்லது அதற்கு அருகாமையில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய கூடுதல் அறிக்கைகளை இந்தக் குழு விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் மத்திய கிழக்கிற்கான ஒருங்கிணைப்பாளர் ஷெரிப் மன்சூர், காசாவில் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் குடும்பங்களை வெளியேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் […]

இலங்கை

கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் விளக்கமறியலில்

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிவாளர் வெள்ளிக்கிழமை மாலை (அக். 13) கைது செய்யப்பட்டார். குறித்த பதிவாளருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.