இலங்கை

கொக்குத்தொடுவாய் – புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோத வாடிகள்… தயங்கும் அதிகாரிகள்

  • October 14, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களால் சட்டவிரோதமாக வாடிகள் ஓகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டரை மாதமாகியும் அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் மீண்டும் புதிய வாடிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்று நிலவரங்களை பார்வையிட்டதன் பின்னர் தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான துரைராசா ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீவிரமடையும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்

லண்டன் மற்றும் மான்செஸ்டர் உட்பட பிரித்தானியா முழுவதும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் எவரும் அல்லது பாதையை விட்டு விலகிச் சென்றால் கைது செய்ய நேரிடும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் முன்னோடியில்லாத தாக்குதலை நடத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பாலஸ்தீனிய போராளிக் குழுவைச் […]

இலங்கை

பதுளை மாவட்டத்திற்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை!

  • October 14, 2023
  • 0 Comments

பதுளை மாவட்டத்தில் உள்ள ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு குறித்த சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும், காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் இன்று (14.10) மாலை 04 மணி முதல் நாளை (15.10) மாலை 04 மணி வரை அமுலுக்கு வரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

லூவர் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.. அருங்காட்சியகம் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று சனிக்கிழமை மூடப்பட்டுள்ளது. இன்றை நாளுக்கான நுழைவுச் சிட்டைகளை முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் என லூவர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. அங்கிருந்த 15,000 பேர் வெளியேற்றப்பட்டு அருங்காட்சியகம் மூடப்பட்டது. பின்னர் ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை

இரு இலங்கை பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது!

  • October 14, 2023
  • 0 Comments

இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோர்டானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை

ஹமாஸ் தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், யூத விரோத செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது ஹமாஸைப் புகழ்ந்தாலோ நாடுகடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். பிரித்தானிய புலம்பெயர்தல் அமைச்சரான ராபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick), தேசிய பாதுகாப்பு கருதி, வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவோரின் விசாக்களை ரத்து செய்வதற்கான வழிகளை ஆராயுமாறு உள்துறை அலுவலக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் (Gerald Darmanin), பிரான்சில் யூத விரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து வெளிநாட்டினரையும் நாடுகடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு […]

இலங்கை

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட யுவதி விமான நிலையத்தில் கைது!

  • October 14, 2023
  • 0 Comments

கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்காக செல்ல முயற்சித்த இளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவர் ஒன்றினால் கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் கட்டாருக்கு அனுப்பிவைக்க முற்பட்டது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள […]

இந்தியா

டெல்லி – பேச மறுத்த காதலிக்கு காதலனால் நேர்ந்த விபரீதம்..!

  • October 14, 2023
  • 0 Comments

இந்திய தலைநகர் டெல்லியில், பேச மறுத்த காதலியை 13 முறை கத்தியால் குத்திய காதலனை பொதுமக்கள் பொலிஸில் பிடித்துக் கொடுத்தனர். டெல்லி லாடோ சாராய் பகுதியை சேர்ந்தவர் பிராக்சி. இவர் கவுரவ் பால் என்ற இளைஞருடன் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளார். இந்த விஷயம் பிராக்சியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளதால், இளைஞருடன் பழகுவதை நிறுத்த வேண்டும் என்று கண்டித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, கவுரவ் பாலுடன் பேசாமல் பிராக்சி தவிர்த்துள்ளார். இதனால், பிராக்சி மீது கவுரவ் கடும் கோபத்துடன் இருந்துள்ளதாக […]

பொழுதுபோக்கு

லியோவில் ஃபஹத் பாசில் கன்ஃபார்ம்… உண்மையை உளறிக்கொட்டிய விஜய் மகன்

  • October 14, 2023
  • 0 Comments

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்னும் 5 நாட்களில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் LCU கான்செப்ட்டில் இருக்குமா என லோகேஷ் கனகராஜ் இதுவரை அப்டேட் கொடுக்கவில்லை. இந்நிலையில் லியோவில் விஜய் மகனாக நடித்துள்ள மேத்யூ தாமஸ், இந்தப் படம் பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார். விஜய்யின் லியோவும் LCUல் இருக்கும் என ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், அதுபற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என லோகேஷ் கூறிவிட்டார். அதேநேரம் லியோவில் செம்ம சர்ப்ரைஸ் இருக்கும் எனவும் […]

வட அமெரிக்கா

90 ஆண்டுகள் தாமதமாக நூலகத்துக்கு திரும்பிய இரவல் புத்தகம்… விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?

  • October 14, 2023
  • 0 Comments

நியூயார்க் பொது நூலகம் ஒன்றில் இரவல் பெறப்பட்ட புத்தகம் 90 ஆண்டுகள் கழித்து தாமதமாக நூலகத்துக்கு திரும்பியது. அதற்கு தாமத கட்டணமாக நூலகம் விதித்த அபராதம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. நூலகமோ, தனிநபரோ இரவலாக பெறப்பட்ட புத்தகம் தனது இருப்பிடத்துக்கு திரும்புவதில் காலதாமதம் ஆவது சாதாரணமானது. ஆனால் 90 ஆண்டுகள் கழித்து ஒரு புத்தகம் அதன் நூலகத்துக்கு திரும்பி இருப்பது அசாதாரணமானது இல்லையா? அப்படி நியூயார்க்கில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவத்தில் சுவாரசியமும் சேர்ந்திருக்கிறது.நியூயார்க்கின் லார்ச்மாண்ட் பொது நூலகத்தில் […]