இலங்கை

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட யுவதி விமான நிலையத்தில் கைது!

கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்காக செல்ல முயற்சித்த இளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவர் ஒன்றினால் கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் கட்டாருக்கு அனுப்பிவைக்க முற்பட்டது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்