எகிப்தின் முதல் ராணியின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட 5,000 ஆண்டுகள் பழமையான வைன் !
எகிப்தின் முதல் பெண் பாரோ (ராணி) என்று நம்பப்படும் பெண்ணின் கல்லறையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுவின் சீல் செய்யப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டியானா கோஹ்லர் தலைமையிலான ஜெர்மன்-ஆஸ்திரியக் குழு, அபிடோஸில் உள்ள ராணி மெரெட்-நீத்தின் கல்லறையை அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது பெரிய பாட்டில்களில் வைன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில் “வைன் திரவமாக இல்லை, அது சிவப்பு […]













