தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேல் இராணுவம் தீர்மானம்
காஸா பகுதியில் இன்று (22) முதல் தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேல் இராணுவம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் கட்டங்களில் தமது படைகள் எதிர்கொள்ளும் அபாயங்களை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, வடக்கு காஸா பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்தும் தங்கியிருந்தால் உடனடியாக தெற்கு பகுதிகளுக்கு செல்லுமாறும் அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், காஸா மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளுக்காக ரஃபா நுழைவாயில் நேற்று திறக்கப்பட்டது. காஸா பகுதியில் தண்ணீர், உணவு, […]













