ஐரோப்பா

பிரான்ஸ் மக்களின் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க தயாராகும் அரசாங்கம்

  • October 23, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சமூகவலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மதவாதம் கொண்ட நபர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களது கணக்கே கண்காணிக்கப்படவுள்ளது. end-to-end encryption என அழைக்கப்படும் பிற நபர்களால் கண்காணிக்க முடியாத குறுந்தகவல்களை தேவை கருதி அவை பார்வையிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார். WhatsApp, Signal, Telegram போன்ற செயலிகளில் இந்தend-to-end encryption வசதி உள்ளதால் பயங்கரவாதிகளால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே சந்தேகத்துக்கு இடமானவர்கள் பயன்படுத்தும் மேற்படி செயலிகளில் பரிமாறப்படும் தகவல்கள் உடைக்கப்பட்டு அவை கண்காணிக்கப்படும் […]

இலங்கை

தூத்துக்குடி – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை விரைவில்

  • October 23, 2023
  • 0 Comments

விரைவில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ. உ. சி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் கப்பல் போக்குவரத்திற்காக இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக துறைமுக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை மையமாகக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு கப்பல் […]

ஆப்பிரிக்கா செய்தி

காங்கோவில் படகு கவிழந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழப்பு

  • October 22, 2023
  • 0 Comments

  காங்கோவின் ஈக்வேட்டூர் மாகாணத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். மாகாணத்தின் தலைநகரான பண்டாகாவில் இருந்து சுமார் 74 மைல் தொலைவில் உள்ள Ngondo நோக்கி பயணித்த போது படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. சுமார் 200 பயணிகள் மீட்கப்பட்டதாகவும் மேலும் சிலரை காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார். Equateur மாகாணத்தில் காங்கோ ஆற்றில் ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது படகு விபத்து இதுவாகும். அக்டோபர் 14 ஆம் திகதி, மற்றொரு படகு கவிழ்ந்து 47 […]

செய்தி மத்திய கிழக்கு

ஈரானில் இரண்டு பெண் ஊடகவியலாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

  • October 22, 2023
  • 0 Comments

ஈரானில் இரண்டு பெண் ஊடகவியலாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொலிஸ் காவலில் இறந்த மாஷா அமினி குறித்த செய்தியை வெளியுலகிற்கு கொண்டு வந்த இவர்கள் மீது அமெரிக்க அரசுடன் ‘ஒத்துழைப்பு’ உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈரானின் சர்ச்சைக்குரிய ஆடைக் கட்டுப்பாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குர்திஷ் பெண் மாஷா அமினி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொலிஸ் காவலில் இறந்தார். மாஷா அமினி சரியான தலைக்கவசம் அணியாததால் பொலிஸாரால் கைது […]

இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த அதிசொகுசு பேரூந்து விபத்து – இருவர் மரணம்

  • October 22, 2023
  • 0 Comments

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த அதிசொகுசு பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க பகுதியில் இன்று இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற அதேநேரம் அப்பகுதியில் கூடிய மக்களினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.   மட்டக்களப்பினை சேர்ந்தவர்களின் குறித்த பஸ் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்துகொண்டிருந்தபோது கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் – தமிழக படகு சேவை மீள ஆரம்பம்

  • October 22, 2023
  • 0 Comments

வடகிழக்கு பருவமழை காலநிலை காரணமாக இந்திய-இலங்கை பயணிகள் படகு சேவையின் முதல் கட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலநிலை தணிந்ததன் பின்னர் பயணிகள் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கை துறைமுக அதிகார சபையின் காங்கசன்துறை துறைமுகத்தின் பொறுப்பதிகாரி சமன் பெரேரா தெரிவித்தார். “செரியபாணி” என்று பெயரிடப்பட்ட இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். 41 ஆண்டுகளுக்குப் பிறகு […]

இலங்கை செய்தி

8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார நெருக்கடி

  • October 22, 2023
  • 0 Comments

14 மாத காலப்பகுதியில் மின்சார கட்டணம் 400 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இதனுடன் ஒப்பிடும் போது அரச ஊழியர்களின் சம்பளம் எந்த காலத்திலும் அதிகரிக்கப்படவில்லை எனவும் அரச மாகாணங்கள் மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன இதனை தெரிவித்துள்ளார். நீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலையேற்றம் காரணமாக 8 இலட்சம் அரச ஊழியர்கள் பிழைப்பு நெருக்கடியில் உள்ளனர். […]

இலங்கை செய்தி

யாழ் ஊடக அமையத்தின் 2023-2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு

  • October 22, 2023
  • 0 Comments

யாழ் ஊடக அமைய பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றபோதே புதிய ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. தலைவர் உரை,செயலாளர் உரை பொருளாளர் கணக்கறிக்கை வாசித்தல் என்பன இடம்பெற்று புதிய நிர்வாக தெரிவு யாழ் ஊடக அமைய உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது யாழ் ஊடக அமையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் குமாரசாமி செல்வகுமார் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக சி.நிதர்சனும் பொருளாளராக க.கம்சனனும் தெரிவு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து, உப […]

இந்தியா செய்தி

வெடி குண்டு மிரட்டல் – மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

  • October 22, 2023
  • 0 Comments

இந்தியாவின் புனேவில் இருந்து டெல்லிக்கு 185 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த ஒருவர், தனது பையில் வெடிகுண்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புனே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுமார் 40 நிமிடங்களில் அந்த விமானம் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. பின்னர், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட பயணியின் பையை சோதனையிட்டபோதும், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை. […]

இலங்கை செய்தி

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் உடல் தூதரகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை

  • October 22, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்களின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் பூதவுடல் தூதரகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்களை வீடியோ தொழில்நுட்பம் மூலம் தொடர்பு கொண்டு உடலை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என தூதுவர் தெரிவித்தார். இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் தொடர்பில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலில் உள்ள சில இலங்கையர்கள் வருடாந்த […]