உலகம் செய்தி

குடு ரஜினாவை சுற்றிவளைத்த பொலிஸார் – போதைப் பொருளுடன் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கணேமுல்ல சஞ்சீவவின் சீடன் என கூறப்படும் நிரோஷன் ஸ்ரீ சாமில் அபேகோனுடன் தொடர்பு கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குடு ரஜினா என்ற பெண் மாகொல தெற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மாகொல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 32 கிராம் ஐஸ் போதைப்பொருள், 506 கிராம் ஹெரோயின், இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்தனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி