அவுகன புத்தர் சிலைக்கு ஆடை அணிவிக்கப்பட்ட சம்பவம்!! தேரருக்கு எதிராக முறைப்பாடு
அவுகன புத்தர் சிலைக்கு அங்கி அணிவித்த சம்பவம் தொடர்பில் ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி தேரருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவுகன புத்தர் சிலை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னமாகும். புத்தர் சிலை தொடர்பாக ஏதேனும் பணிகள் நடந்தால் அந்த துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத காரணத்தினால் அவுகன ரஜமஹா விகாரையின் தேரருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் நிஷாந்தி ஜயசிங்க நெத் […]













