பௌத்த மதத்திற்கு அவமரியாதை – சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் இலங்கை வருகை
சிங்கப்பூர் சென்ற மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமையினால் அவர் சர்ச்சையில் சிக்கியிருந்தார். இவர் தோஹாவிலிருந்து இன்று அதிகாலை 01.32 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து சிறப்பு விருந்தினர் வழியாக வெளியேறியிருந்தார். ஜெரோம் பெர்னாண்டோ போதகருடன் மேலும் இருவர் வருகைதந்துள்ளனர். போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை […]













