செய்தி

பௌத்த மதத்திற்கு அவமரியாதை – சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் இலங்கை வருகை

சிங்கப்பூர் சென்ற மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமையினால் அவர் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

இவர் தோஹாவிலிருந்து இன்று அதிகாலை 01.32 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து சிறப்பு விருந்தினர் வழியாக வெளியேறியிருந்தார்.

ஜெரோம் பெர்னாண்டோ போதகருடன் மேலும் இருவர் வருகைதந்துள்ளனர்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நிலையில், நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

இதன் பின்னர் நீதிமன்றத்தால் அவரை கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் இலங்கை வரும் போது கைதுசெய்ய வேண்டாமெனவும் நாட்டுக்கு வருகை தந்து 48 மணிநேரத்தில் வாக்குமூலமொன்றை வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி