இலங்கை

இலங்கையில் அரசாங்க பதவிகளில் இருப்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்த சுற்றறிக்கை வெளியீடு!

  • September 21, 2023
  • 0 Comments

நிதி அமைச்சின் கருவூல நடவடிக்கைப் பிரிவு 2024 ஆம் ஆண்டில் அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசாங்க அதிகாரிகளின் சம்பள முன்பணம், சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவை  உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை வெளியிட முடியாது – சபாநாயகர்!

  • September 21, 2023
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (21.09) ஈஸ்டர் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்போது விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கிய இரகசிய சாட்சியக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை […]

வட அமெரிக்கா

பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் சந்திப்பு

  • September 21, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த 78வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு கூறினார்.ரஷ்யா பல விசயங்களை ஆயுதங்களாக மாற்றி, தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த விசயங்கள் எங்களுடைய நாட்டுக்கு எதிராக மட்டுமின்றி, உங்களுக்கும் (ஐ.நா. பொது சபை உறுப்பு நாடுகள்) கூட எதிராக பயன்படுத்தப்படுகிறது என கூறினார். பயங்கரவாதிகள் […]

உலகம்

அமெரிக்காவில் மின்னல் தாக்கி இருவர் பலி (வீடியோ)

  • September 21, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான இருவர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் உள்ள Michoacan நகர் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2023/09/19/6269964918141897207/636x382_MP4_6269964918141897207.mp4

இலங்கை

இலங்கைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வெளிநாட்டு பிரஜை!

  • September 21, 2023
  • 0 Comments

இலங்கையர்போல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நாட்டிற்குள் நுழைய முற்பட்ட மலேசிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம்  வருகை தந்த அவர், நேற்று (20.09) மாலை  நாட்டிற்குள் நுழைய முற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் தனது இலங்கை கடவுச்சீட்டை உள்ளூர் குடிவரவு கவுன்டர்களிடம் ஒப்படைத்துள்ளார், இதன்போது கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்திற்கும், இவருக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து விசாரணைகளை […]

இலங்கை

மலேசியாவிற்கு பயணம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி!

  • September 21, 2023
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேசியாவிற்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மலேசிய அரசர் விடுத்த அழைப்பிற்கு இணங்க அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விஜயம் அடுத்த வருடம் (2024) இல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அதிகளவான நிறுவனங்களை வழிநடத்த ஆர்வமாக உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு சாதகமான பதிலையும் வழங்கியுள்ளதாகவும் மலேசிய பிரதமர் தெரிவித்தார்

ஐரோப்பா

பெல்ஜியத்தில் புராதன சின்னத்தை உடைத்த சுற்றுலா பயணிக்கு விதிக்கப்பட்ட அபராதம்

  • September 21, 2023
  • 0 Comments

பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த மையத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டுள்ளார்.அப்போது அங்கு பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு அந்த சிலைகளின் மீது ஏறி அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது […]

இலங்கை

13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் : பிக்கு கைது!

  • September 21, 2023
  • 0 Comments

13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபரான சிவரதாரியர் வசிக்கும் ஆலயத்தில் ஆண் குழந்தை ஒன்று பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எத்துவெவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளநிலையில் விசாரணைகள் […]

பொழுதுபோக்கு

நாக சைதன்யாவுடன் இணைந்தார் சாய் பல்லவி… அவரே கூறிவிட்டார்

  • September 21, 2023
  • 0 Comments

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘மாரி 2’, ‘என்.ஜி.கே’, ‘கார்க்கி’ என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் பேருந்து ஒன்று தீயில் எரிந்து நாசமானது!

  • September 21, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய தினம் இரவு தனது வீட்டின் முன்பாக பேருந்தினை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இவ்வாறு தீபிடித்து எரிந்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் தீயை அணைக்க முயற்சித்தும் பேருந்து முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து   மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

error: Content is protected !!