ஐரோப்பா

தீவிரமடையும் போர்! ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

கடந்த ஒரே நாளில், உக்ரைனிய படையினர் மேலும் 640 ரஷ்ய படையினரைக் கொன்றதுடன் ஏழு டாங்கிகள்,11 ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் பிற ரஷ்ய உபகரணங்களை அழித்துள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் கடந்த 24 பெப்ரவரி 2022 மற்றும் 22 ஜூலை 2023 க்கு இடையில் ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகளை உக்ரைன் படையினர் வெளியிட்டுள்ளனர். [அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிபரங்கள் சமீபத்திய இழப்புகளைக் குறிக்கின்றன] approximately 241,330 (+640) military personnel, 4,140 (+7) tanks, 8,096 […]

அறிந்திருக்க வேண்டியவை

மண் இல்லாமல் வளரும் தாவரங்கள் பற்றி தெரியுமா?

  • July 22, 2023
  • 0 Comments

சுவிஸ் நிறுவனம் ஒன்று மண் இல்லாமல் வளரும் தாவரங்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து வணிக இயக்குனர் பெர்ன்ஹார்ட் பாம்கார்ட்னர் பல தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த தகவல்களை கேள்வி, பதில்களாக தொக்குத்து வழங்கியுள்ளோம். கேள்வி :- இந்த திட்டத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள்? தங்கள் நிறுவனத்தில் பணிப்புரியும் 25 பேரைக் கொண்ட குழுவினர், கீரை மற்றும் நறுமண மூலிகைகளை வளர்க்க துணைப்புரிந்துள்ளனர்.  இதற்காக   மண்ணில்லா ஏரோபோனிக் அமைப்பை உருவாக்கியுள்ளோம்.  நீர்பாசனம், ரோபோ மூலம் தெளிக்கப்படுகிறது. கேள்வி :- […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி விதிப்பு!

  • July 22, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா வரி விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டை நடத்தும்‘இந்தியன் 2’

  • July 22, 2023
  • 0 Comments

இந்தியன் 2’ திரைப்படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ‘இந்தியன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2‘ உருவாகி வருகிறது. ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகி இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. தென்னிந்தியாவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், பாபி […]

இலங்கை

யாழில் ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் அறிவித்தல்!

யாழ்.மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில், மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இதன்படி வெளிமாவட்டங்களில் இருந்து நிகழ்வுகளுக்காக யானைகள் உள்ளிட்ட விலங்குகளை அழைத்து வரும்போது வனவள திணைக்களத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். உரிய அனுமதியின்றி யானைகளை திருவிழாக்களில் பயன்படுத்துவதையும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களில் இருந்து […]

இலங்கை

மேலும் இரு அரசியல் கைதிகள் விடுதலை!

  • July 22, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இரு அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செல்லையா நவரத்தினத்திற்கு 200 வருட சிறைத்தண்டனையும், சண்முகரத்தினம் சண்முகராசாவிற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. விடுதலையான அரசியல் கைதிகளை தமிழ் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துள்ளதோடு, அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களின் வயது, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் […]

இந்தியா

பிரபல கேரள திருநங்கை தம்பதியர் ஐகோர்ட்டில் வழக்கு! குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் ஏற்பட்டுள்ள சிக்கல்

பிரபல திருநங்கைகளான ஜியா பவால் மற்றும் ஜஹாத். இவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நண்பர்கள். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த திருநங்கை தம்பதிக்கு கடந்த பெப்ரவரி மாதம் குழந்தை பிறந்தது. ஆணாக இருந்த ஜகாத் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுத்தார். இதை ஜியா பவல் அறிவித்தார். ஆனால் அவர்களுக்கு என்ன குழந்தை உள்ளது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இவர்களுக்கு […]

இந்தியா

உத்திரபிரதேசத்தில் ஆற்றின் நடுவே பயணிகளுடன் சிக்கி கொண்ட பேரூந்து (வீடியோ)

  • July 22, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் ஆற்றில் சிக்கிய பேருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் சிக்கியது. மண்டவாலி மாவட்டத்தின் கீழ் வரும் பிஜ்னோரின் கோட்டா வாலி ஆற்றில் 36 பயணிகளுடன் சென்ற சாலைப் பேருந்து ஆற்றில் […]

இந்தியா

இந்தியாவில் குப்பையில் கொட்டப்பட்ட தக்காளிகள்! வைரலாகும் புகைப்படங்கள்

இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், தெலுங்கானாவில் மழையால் சேதமடைந்த தக்காளி குப்பையில் கொட்டப்பட்ட சம்பவம் ஓன்று பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக சந்தையில் வரத்து குறைந்ததால் இந்தியா முழுவதும் தக்காளி விலை கிலோ ₹100க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், தக்காளி விவசாயிகள் பலர் சில வாரங்களிலேயே கோடீஸ்வரர்களாகி விட்டனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் தக்காளி பயிரில் பல லட்சம் வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து […]

இலங்கை

அனைத்து வங்கிகளும் கடன் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் – மத்திய வங்கி!

  • July 22, 2023
  • 0 Comments

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொள்கை வட்டி விகிதங்களை ஒப்பிடும்போது கடன் வட்டி விகிதங்களையும் குறைக்க வேண்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடன் வட்டி விகிதங்கள் போதியளவு குறைக்கப்படாவிட்டாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ இது தொடர்பில் மத்திய வங்கி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!