செய்தி

சேவையில் இருந்து அகற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டன!

  • July 25, 2023
  • 0 Comments

சேவையில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 175 பேருந்துகள் திருத்தப்பட்டு மீண்டம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (24.07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக உதிரி பாகங்கள் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக அகற்றப்பட்ட பேருந்துகளே இவ்வாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளன. கடந்த 03 வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபடாத 852 பேரூந்துகளில் 400 பேரூந்துகளை சீர்செய்யும் திட்டமொன்று […]

இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளருடன் ஜுலி சங் கலந்துரையாடல்!

  • July 25, 2023
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோவை இன்று (25.07) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த விடயத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜுலி சங், இதன்போது இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான ஆதரவை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். I met with Takafumi Kadono, the new Country Director for Sri Lanka […]

அறிந்திருக்க வேண்டியவை இலங்கை

மண்டைதீவு வைத்தியசாலையில் இலவச மருத்துவ முகாம்

  • July 25, 2023
  • 0 Comments

யாழ். மண்டைதீவு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் அனுசரனையில் இலவச மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட உள்ளது. இந்த இலவச மருத்துவ முகாம், ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்டைதீவு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த மருத்துவமுகாமில் இலவச நீரிழிவு பரிசோதனை செய்ய விரும்பியவர்கள் 12 மணித்தியாலங்கள் நீர் மற்றும் உணவு என்பவற்றை எடுத்துக்கொள்ளாமல் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த முகாமில் இலவச நீரிழிவு பரிசோதனை […]

இலங்கை

கடும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபாய்!

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஜூலை 25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 256.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை 243.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

ஐரோப்பா

இஸ்ரேல் சோதனைச்சாவடி மீது தாக்குதல்; ஆயுதக்குழுவினர் மூவர் சுட்டுக்கொலை

  • July 25, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய […]

வட அமெரிக்கா

கனடாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலம் மீட்பு

  • July 25, 2023
  • 0 Comments

நோவாஸ் ஸ்கோட்டியா மழை வெள்ளத்தில் காணாமல் போன நான்கு பேரில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ள நிலைமைகளினால் நான்கு பேர் காணாமல் போயிருந்தனர்.இவ்வாறு காணாமல் போனவர்கள் இரண்டு பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்கள் நீரில் மூழ்கிய போது அதிலிருந்து தப்பிக்க முடியாத சிலர் இவ்வாறு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மீட்பு பணியாளர்கள் […]

இலங்கை

நீரிழ் மூழ்குபவர்களை கையால் பிடித்து இழுக்காதீர்கள்!

  • July 25, 2023
  • 0 Comments

உலக நீரில் மூழ்கி தடுப்பு தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்படுகிறது. நீரில் மூழ்குதல் உள்ளிட்ட சிக்கல்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்திற்கும் மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர்கள் நிபுணர்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,  வயது முதிர்ந்த ஒருவர் இறப்பதற்கு ஒரு அடி நீர்மட்டம் கூட போதுமானது. இலங்கையில் வருடாந்தம் 10,000 முதல் 12,000 பேர் வரை […]

இலங்கை

யாழில் புதிய அதிபர் நியமனத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • July 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(25) காலை ஒன்று கூடிய மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறு கோரி பழைய மாணவர்கள் அப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை […]

இலங்கை

மெனிங் சந்தையில் போராட்டம் நடத்துவற்கு தடை உத்தரவு பிறப்பிப்பு!

  • July 25, 2023
  • 0 Comments

பேலியகொட மெனிங் சந்தையில் நாளை (26) நடத்தப்படவிருந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை  உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு அளுத்கடை  நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (27.05) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேலியகொட மெனிங் சந்தையில் விற்பனை நிலையங்கள் வெளியாட்களுக்கு வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தி, நாளைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு பொது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல் துறையினர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். அதன்படி, மானிங் மார்க்கெட் பொது வர்த்தக சங்கத்தின் […]

இலங்கை

கொழும்பு மட்டக்குளி வழியாக பயணிப்போருக்கு ஓர் அறிவுறுத்தல்!

  • July 25, 2023
  • 0 Comments

கொழும்பு, மட்டக்குளி – சீம மலகய  பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில், பயணிக்கும் 145 பேருந்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். மட்டக்குளிய பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் இரண்டு பேரூந்து சேவைகளை ஒன்றிணைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்குளிக்கும் சீம மாலகவுக்கும் இடையில் சேவையாற்றும் பேருந்தின் ஊழியர் ஒருவர் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார். 145 வழித்தடத்தில் எந்தப் பேருந்தும் ஓடவில்லை எனவும் 260, 155 ஓடாததற்குக் காரணம், ஒன்றாக […]

error: Content is protected !!