கடும் நட்டத்தில் ட்விட்டர்!! எலோன் மஸ்க் கவலை
விளம்பரம் பாதியாகக் குறைந்ததாலும், அதிகக் கடனாலும் ட்விட்டர் நஷ்டமடைந்து வருகிறது என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். “விளம்பர வருவாய் 50% சரிவு மற்றும் அதிக கடன் காரணமாக நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம்,” என்று மஸ்க் சனிக்கிழமை ஒரு ட்வீட் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த இலையுதிர்காலத்தில் 44 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, பல்வேறு மாற்றங்களை மஸ்க் செய்திருந்தார். கடந்த மே மாதம் புதிய தலைமை செயல் அதிகாரியையும் அவர் நியமித்திருந்தார். , […]













