பொழுதுபோக்கு

‘தளபதி 68’ படத்திற்கு டைட்டிலாக IPL டீமின் பெயர்! அதுவும் எந்த டீம் தெரியுமா?

  • June 5, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார். லியோ படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடிவடையாத நிலையில், அடுத்ததாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தால் பறிபோகும் தொழில்கள் – ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

  • June 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் 4 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளது. இது பணியாளர்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. உலகில் நாள்தோறும் தொழில்நுட்பமும், தொழில்நுட்பம் சார்ந்த புதிய சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் மனிதர்களை போன்றே இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சாட்ஜிபிடி எனப்படும் இந்த தொழில்நுட்ப பயன்பாடு பல்வேறு துறைகளிலும் நுழைவதால் ஏராளமானோர் வேலையை இழக்க நேரிடும் என்று […]

ஆசியா

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு – அதிக அளவில் பயணியாளர்களை எடுக்கும் நிறுவனம்

  • June 5, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலை தேடுபவராக இருந்தால் அவர்களுக்கு தற்போது சிறந்த நேரமாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (Standard Chartered) அதன் போட்டித்தன்மையை விரிவுபடுத்துவதற்கான அனைத்து தேவைகளையும் செய்து வருகிறது. குறிப்பாக போட்டி வங்கிகளுக்கு நேர்மாறாக, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி பணியாளர்களுக்கு அதிக அளவில் பணிக்கு எடுக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அந்த வங்கியின் ஆசிய தலைவர் பெஞ்சமின் ஹங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியிடம் கூறினார். சமீபத்தில் சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசிய ஹங், […]

ஐரோப்பா

ஜெர்மனியில் விளையாட்டினால் ஏற்பட்ட ஆபத்து – 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • June 5, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் பிராங்க்பர்ட் (Frankfurt) நகரில் இடம்பெற்ற அனைத்துலக இளையர் காற்பந்துப் போட்டியில் JFC பெர்லின், Metz அணிகள் பங்கெடுத்தன. பெர்லின் நகரைச் சேர்ந்த 15 வயதுக் காற்பந்து வீரர் பிரஞ்சுக் குழுவுடன் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து மரணமடைந்தார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ஜெர்மனியின் இளைஞர்களுக்கான அணியில் விளையாட்டு வீரராக இருந்த 15 வயதுடைய இளைஞரை தாக்கி கொலை செய்தார் என சந்தேகம் […]

ஆசியா

ஹொங்கொங்கில் பரபரப்பு – பெண்களை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் செய்த கொடூரம்

  • June 5, 2023
  • 0 Comments

ஹொங்கொங் கடைதொகுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை இரண்டு பெண்களை நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. அங்கு வந்த பொலிஸாரால் கத்தியால் குத்திய நபர் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. டைமண்ட் ஹில்லில் உள்ள பிளாசா ஹொலிவுட் கடைத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களில் இந்த சம்பவம் முழுமையாகப் பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் நபர் ஒருவர், பெண்களை பின்னாலிருந்து நெருங்குவதைக் காணொளியில் பார்க்க முடிந்துள்ளது. ஒரு பெண்ணை […]

இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • June 5, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழையுடன் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுகாதார அமைச்சு இந்த விடயம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னர் தமது சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டின் 12 மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உலகம்

திடீரென இந்திய மாப்பிள்ளை போல் மாறிய எலான் மஸ்க்! வெளிவரும் இரகசியம்

  • June 5, 2023
  • 0 Comments

எலான் மஸ்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களே இவ்வாறு இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்திய மாப்பிள்ளை போல எலான் மஸ்க் ஷெர்வானி அணிந்துகொண்டு குதிரை மீது அமர்ந்துள்ளது போலவும், நடனமாடுவது போலவும் உள்ள புகைப்படங்களைப் பார்த்த பலர், இது எப்போது என இணையத்தில் விவாதம் நடத்தியுள்ளது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது தெரியவந்தது. மும்பையை சேர்ந்த ரோலிங் கேன்வாஸ் என்ற திருமணப் புகைப்பட கலைஞர், செயற்கை நுண்ணறிவில் மிட்ஜர்னி […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • June 5, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 10 பேரில் ஒருவர் ஓரினச்சேர்க்கையாளர் என தெரியவந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் படி இந்த விடயம் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஓருபால் ஈர்ப்பாளர்கள் இம்மாதம் முழுவதையும் பெருமைமிகு மாதமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரான்சில் பத்தில் ஒருவர் ஒருபால் ஈர்பாளர்கள் என தெரியவந்துள்ளது. ipsos நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. குறிப்பாக 1997 ஆம் ஆண்டின் பின்னர் பிறந்தவர்களில் 19% சதவீதமானோர் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு பிரான்ஸ் உள்ளிட்ட 30 […]

இந்தியா

ஒடிசா விபத்தில் உயிரிழந்தோரின் பிள்ளைகளுக்காக செவாக் வெளியிட்ட அறிவிப்பு

  • June 5, 2023
  • 0 Comments

ஒடிசாவில் இடம்பெற்ற பாரிய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் செவாக் தெரிவித்துள்ளார். தனது உத்தியாகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விரேந்தர் செவாக் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “இந்த துயரமான நேரத்தில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்ய முடிந்தது. செவாக் இன்டர்நெஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் நான் அத்தகைய பிள்ளைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஒடிசா […]

இலங்கை

இலங்கையில் கோவில் திருவிழாவில் நடந்த விபரீதம் – பூசாரிக்கு நேர்ந்த கதி

  • June 5, 2023
  • 0 Comments

அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பூசாரி தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.