நேட்டோவின் இலக்கை எட்டுமா பிரித்தானியா?
பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் Defence Investment Plan (DIP) , பனிப்போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடாக பாதுகாப்புத்துறை நிபுணர்களால் கருதப்படுகின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் அணுசக்தித் தடுப்பு முறைகள், நவீன போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்காக சுமார் 270 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் போரின் படிப்பினைகளைக் கொண்டு தன்னியக்க பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
இருப்பினும், 2030-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை இராணுவத்திற்காகச் செலவிட வேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் இலக்கை எட்ட முடியாமல் போவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதாக இருக்காது எனப் பல பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ரஷ்யா தற்போது தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5சதவீதத்துக்கு மேல் பாதுகாப்புத் துறைக்காகச் செலவிடுகிறது.
பிரித்தானியா 2035ஆம் ஆண்டிற்குள் 3.5 சதவீதம் என்ற இலக்கை எட்ட உத்தேசித்துள்ளது.




