செய்தி தமிழ்நாடு

சினிமா இயக்குனரின் மனைவிக்கு கொலை மிரட்டல்

  • May 2, 2023
  • 0 Comments

வளசரவாக்கம்,ஓய்.எம்.ஜி.பாபு தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(33), இவர் சினிமாத்துறையில் இயக்குனராக பணி புரிந்து வருகிறார். தற்போது புதுமுக நாயகனை வைத்து படம் ஒன்றை எடுத்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தான் சினிமா துறையில் இயக்குனராக இருந்து வரும் நிலையில் இளம் நடிகர்களை நடிக்க வைக்க திரைப்பட்டறை என்ற பெயரில் பயிற்சி பள்ளி நடத்தி வருவதாகவும் தனக்கு மைதிலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஏழு […]

இலங்கை

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் லிட்ரோ எரிவாயு விலை

  • May 2, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த எரிவாயுவின் விலை சுமார் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டது. இந்தநிலையில் குறித்த எரிவாயு கொள்கலன் […]

ஆன்மிகம்

சிவசிவா

  • May 2, 2023
  • 0 Comments

பஞ்சாங்கம்: ~ சித்திரை : ~ 19. ~ 【 02- 05- 2023 】 செவ்வாய்கிழமை. 1】வருடம்: ஸ்ரீ சோபகிருது: {சோபகிருது நாம சம்வத்ஸரம்} 2】அயனம்: உத்தராயணம் 3】ருது:~ வஸந்த- ருது. 4】மாதம்:~ சித்திரை:-. ( மேஷம் – மாஸே ). 5】பக்ஷம்:~ சுக்ல- பக்ஷம்:- ~ வளர்- பிறை. 6】திதி:~  துவாதசி:- இரவு: 11.13. வரை, பின்பு திரியோதசி. 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- துவாதசி. 8】நேத்திரம்: 2- ஜீவன்: 1. 9】நாள்: ~ செவ்வாய்கிழமை. […]

உலகம்

மகள்களுக்காக ஆடை வடிவமைப்பாளராக மார்க் ஸக்கர்பர்க்!

  • May 2, 2023
  • 0 Comments

Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg மகளுக்காக புதிய துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் போன்ற விடயங்களில் அவர் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மகள்களுக்காக ஆடைகளை வடிவமைத்து 3D printing மூலம் அவற்றை உருவாக்கத் தொடங்கியிருப்பதாக ஸக்கர்பர்க் தமது Facebook பக்கத்தில் தெரிவித்தார். கடந்த சில மாதங்களில் தாம் உருவாக்கிய ஆடைகளை மகள்கள் அணிந்திருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். அதற்காகத் தையல் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆடைகள் சௌகர்யமானவை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 6 பேர் உயிரை பறித்த புழுதிப் புயல்

  • May 2, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் புழுதிப் புயல் நீடிப்பதால் சாலையில் பல விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100 வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக Illinois பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலையில் புழுதிப் புயல் வீசியதால், பயணிகளை ஏற்றிச் சென்ற சுமார் 60 வாகனங்களும், 30 சரக்கு வாகனங்களும் விபத்துக்குள்ளாயின. சிகாகோ (Chicago) செயின்ட் லூவிஸ் (St. Louis) நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் அந்த விபத்து நேரிட்டது. 2 லாரிகள் தீபற்றியதாகவும் கூறப்படுகிறது. இரண்டிலிருந்து 80 வயதுக்கு இடைப்பட்ட 30 க்கும் […]

வட அமெரிக்கா

2 மாதங்களில் அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள்

  • May 2, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் சிலிக்கன் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகளைத் தொடர்ந்து, பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகியுள்ளது. இந்த வங்கியை ஜெ பி மோர்கன் சேஸ் வங்கி வாங்கியுள்ளது. அமெரிக்காவில் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கன் வேலி வங்கி நிதி நெருக்கடியால் திவால் ஆனது. இந்த வங்கியைத் தொடர்ந்து சிக்னேச்சர் வங்கியும் திவால் ஆனது. இந்த நிலையில், 3வதாக, கடும் நிதிச்சிக்கலில் சிக்கியிருந்த, சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவால் ஆகியுள்ளது. இதையடுத்து […]

கருத்து & பகுப்பாய்வு

அடுத்த 5 ஆண்டுகளில் உலகெங்கும் ஏற்படவுள்ள பாதிப்பு!

  • May 2, 2023
  • 0 Comments

அடுத்த 5 ஆண்டுகளில் உலக வேலைச் சந்தை பெரிய இடையூறுகளை எதிர்நோக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளியல் அமைப்பின் அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கருத்தாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இயற்கை எரிசக்தி அமைப்புகள் போன்ற பல அம்சங்கள் அதிகமான வேலைகளில் உருவாக்கக்கூடும். 2027ஆம் ஆண்டுக்குள் 69 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும் அதே நேரத்தில் 14 மில்லியன் வேலைகள் இல்லாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஜெர்மனியில் பிறக்கும் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் யூரோ நிதி உதவி!

  • May 2, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பிறக்கின்ற குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசாங்கமானது 10 ஆயிரம் யுரோ நிதி உதவி திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தீர்மானித்துள்ளது. சிடியுவோ என்று சொல்லப்படுகின்ற ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியினுடைய பொது செயலாளர் மரியோ காரியோ அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவித்து இருக்கின்றார். அதாவது எதிர்காலத்தில் இந்த பிள்ளைகள் இந்த 10 ஆயிரம் யூரோ பணத்தை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு புதிய நடவடிக்கை!

  • May 2, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மின்-சிகரெட் புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் எடுக்க்படபவுள்ளது. சுகாதார அமைச்சர் Mark Butler இதனை அறிவித்திருக்கிறார். புகையிலை நிறுவனங்கள் வேண்டுமென்றே இளையர்களை நிக்கொட்டீனுக்கு அடிமையாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒருமுறை பயன்படுத்தும் மின்-சிகரெட்களும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பரிந்துரைக்கப்படாத மின்-சிகரெட்களும் இனி ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்படும். மின்-சிகரெட்களில் நிக்கொட்டின் அளவும் கட்டுப்படுத்தப்படும். ஆஸ்திரேலியாவில் பத்தாண்டுகளில் புகைப்பிடிப்புக்கு எதிரான மிகப்பெரிய சீர்த்திருத்தமாக அந்த நடவடிக்கைகள் கருதப்படுகின்றன. அண்மைக் காலங்களில் இளையர்களுக்கிடையே மின்-சிகரெட்டுகளைப் புகைக்கும் போக்கைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா சிரமப்படுகிறது. உயர்நிலைப் பள்ளிகளில் […]

இலங்கை

இலங்கையில் பால் மாவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • May 2, 2023
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பால்மா இறக்குமதியாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட […]