பொழுதுபோக்கு

தொடர் வெற்றியால் இமயம் தொட்டது கவின் சம்பளம்!! தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்கள்

  • May 9, 2023
  • 0 Comments

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து ஹிட் அடித்த நடிகர் நடிகைகளுள் கவினும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த டாடா படம் மெகா ஹிட் ஆனது. இதனால் கவினின் சம்பளமும் இமயம் தொட்டது. இவர் பெரிய இசையமைப்பாளர், பெரிய நடிகை என கமிட் செய்ய கவின் முயற்சிக்கின்றார். இந்த நிலையில் கவினை வைத்து ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்க ஒரு கோடி சம்பளம் பேசியுள்ளனர். ஆனால், கவின் சம்பளமாக 2 கோடி கேட்கின்றாராம். அந்த தயாரிப்பு […]

உலகம்

அணுசக்தியின் எதிர்காலம் குறித்து பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள கருத்து!

  • May 9, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் அணுசக்தி துறையில் பரட்சியை ஏற்படுத்தும் வகையில், புதிய அணுமின் நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸால்  வயோமிங்கில் உள்ள கெம்மரரில் புதிய அணுமின் நிலையத்தைத் திறக்கப்படவுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் அமெரிக்க எரிசக்தி சுதந்திரத்தை ஆதரிப்பதற்கும் இந்த ஆலை துணை புரியும் நம்பப்படுகின்ற நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  “அணுசக்தி, நாம் அதைச் சரியாகச் செய்தால், நமது காலநிலை […]

இலங்கை

பாதுக்க பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை- குற்றவாளிகள் கைது

  • May 9, 2023
  • 0 Comments

பாதுக்க, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் கட்டட பணியாளர் ஒருவருடன் வசித்து வந்த காதல் மனைவி எனக் குறிப்பிடப்படும் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் பெண் சந்தேக நபர், குறித்த கட்டட பணியாளரின் முன்னாள் மனைவி என்றும் மற்றயவர் அவரின் தம்பி என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண் சந்தேகநபர் […]

இலங்கை

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் தமிழ் கைதிக்கு கொலை மிரட்டல் விவகாரம் : அமைச்சருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

  • May 9, 2023
  • 0 Comments

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் பிரவேசித்து தமிழ்க் கைதி ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி லொஹான் ரத்வத்தை வரும் 14 ஆம் திகதி அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை,  அங்கிருந்த தமிழக் கைதி […]

ஆசியா

பாக். சிறையில் இந்திய மீனவர்ஒருவர் மரணம் – 199 பேரை விடுதலை செய்ய அரசு முடிவு

  • May 9, 2023
  • 0 Comments

எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்த நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையி்ல் வருகிற 12ம் திகதி 199 இந்திய மீனவர்களை […]

வட அமெரிக்கா

சீன ராஜதந்திரியை நாடு கடத்தவுள்ள கனடா – எதிர்பு தெரிவித்துள்ள சீனா

  • May 9, 2023
  • 0 Comments

கனடாவிற்கான சீனத் தூதரகத்தில் பணியாற்றி வரும் ஸாவொ வெய் என்ற சீன ராஜதந்திரியே நாடு கடத்தப்பட உள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் சொங் மற்றும் அவரது குடும்பம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மீது சீனா அரசியல் தலையீடுகளை செய்யும் முனைப்புக்களில் இந்த ராஜதந்திரி செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டின் சட்டங்களுக்கு ஸாவோ வெய், பொருத்தமற்றவர் என வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோன் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களின் பாதுகாப்பும் மக்களின் சுபீட்சமும் மிகவும் முக்கியமானது […]

இலங்கை

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் மதிப்பு வெளியானது!

  • May 9, 2023
  • 0 Comments

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணிக்கக்கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்டது. இந்நிலையில். அந்தக் கல்லின்  உண்மையான மதிப்பு 10, 000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ) எனத் தெரியவந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை தெரிவித்துள்ளது. இதேவேளை  குறித்த மாணிக்கக்கல் துபாயிக்கு முதலில் கொண்டு […]

இலங்கை

ராத்கராவ பகுதியில் பயணிகளுடன் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!

  • May 9, 2023
  • 0 Comments

இன்று காலை ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராத்கராவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்துவிபத்துக்குள்ளானதில் ஓட்டுநரும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான மூவரும் பொரளாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து பொரலந்த பகுதியில் அமைந்துள்ள தமது வீடுக்கு திரும்பிய போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் இவ் விபத்து குறித்து ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொழுதுபோக்கு

ரஜினி முஸ்லிமாக நடிக்க காரணம் என்ன? பயில்வான் வெளியிட்ட பரபரப்பு செய்தி

  • May 9, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி உடன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த படத்தில் செம மாஸ் லுக்கில் ரஜினி இடம் பெற்றிருந்த நிலையில் லால் சலாம் போஸ்டர் வெளியாகியது. லால் சலாம் போஸ்டர் வெளியான நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதலில் லைக்காவிடம் லால் சலாம் படத்தை […]

உலகம்

கூகுள் மேப்பை பார்த்து வாகனம் ஓட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

  • May 9, 2023
  • 0 Comments

பெண் ஒருவர் மதுபோதையில் கூகுள் மேப்ப்பை பார்த்து காரை ஓட்டி கடலுக்குள் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்தாலும், அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கின்றன. அந்த வகையில் தற்போது செல்போன் செயலிகளின் மூலமே உலகத்தின் மூலை முடுக்கில் என்ன நடந்தாலும் அதனை எளிதாக தெரிந்து கொள்கின்றனர். இதில் கூகுள் மேப்ஸ் எனப்படும் வழிகாட்டும் செயலியை […]