பொழுதுபோக்கு

மிகுந்த விரக்தியில் பிரபல நடிகர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்.. மக்களே மீண்டும் சிரிக்க ரெடியா??

  • May 15, 2023
  • 0 Comments

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் இனிமேல் கமர்சியல் படம் மட்டுமே எடுக்கப் போவதாக சொல்லி உள்ளாராம். அதுவும் அந்த கமர்சியல் படங்கள் கலக்கலான நையாண்டி கலந்த படமாக எடுக்கவிருக்கிறாராம். ஏற்கனவே வடிவேலு உடன் இவர் நிறைய படங்களில் செய்யும் லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்போது மீண்டும் அதே ஜானரில் படங்களை எடுக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பார்த்திபன் இயக்கும் படத்தில் அவர் நடிப்பாரா என்ற கேள்வியையும் […]

செய்தி தமிழ்நாடு

இரும்பு மனிதனின் வெற்றிக்காக காத்திருக்கும் இந்தியா

  • May 15, 2023
  • 0 Comments

பல சாதனைக்களுக்கு சொந்தக்காரரான இரும்பு மனிதன் கண்ணன் கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டி நடந்தது. தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் கலந்து கொண்டு வெள்ளிபதக்கம் பெற்றார். 2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 13,14,15, தேதிகளில் ஸ்பெயினில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள கண்ணன் தேர்வாகி உள்ளார். இதற்காக இன்று நாகர்கோவில் […]

ஐரோப்பா

ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜி7 நாடுகள் திட்டம்!

  • May 15, 2023
  • 0 Comments

ஜி7 நாடுகளின் தலைவர்கள் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன்படி இந்த வாரம் ஜப்பானில் நடைபெறும் உச்சிமாநாட்டில், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் கடுமையாக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளனர். 19-21 மே கூட்டங்களில் தலைவர்களால் அறிவிக்கப்படும் புதிய நடவடிக்கைகள் மூன்றாம் நாடுகள் சம்பந்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை ஏய்ப்பதை இலக்காகக் கொண்டு, ரஷ்யாவின் எதிர்கால எரிசக்தி உற்பத்தியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை  ரஷ்யாவின் இராணுவத்தை ஆதரிக்கும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த […]

இலங்கை

இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை உடனடியாக குறைத்த சதொச நிறுவனம்!

  • May 15, 2023
  • 0 Comments

லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, 6 ரூபாவால் குறைக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியை இன்று (15) முதல் 243 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், 400 கிராம் பால் மா பக்கெற் ஒன்றின்  விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,080 ரூபாவாகும்.

ஐரோப்பா

நேட்டோவில் சேர்வதற்கான கோரிக்கையை பரிசீலிக்குமாறு செலன்ஸ்கி வலியுறுத்தல்!

  • May 15, 2023
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, நேட்டோவில் சேர்வதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக கோபன்ஹேகன் ஜனநாயக உச்சி மாநாட்டில் வீடியோ உரையில் பேசிய அவர்,  இராணுவக் கூட்டணியில் சேரும் கியேவின் முயற்சியில் “நேர்மறையான அரசியல் முடிவை” எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்கான நேரம் இது  எனக் குறிப்பிட்ட அவர், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கான அரசயில் முடிவை அங்கீகரிக்குமாறும் வலியுறுத்தினார். ஜூலை மாதம் வில்னியஸில் நேட்டோ உச்சி மாநாட்டை நடத்த […]

உலகம் ஐரோப்பா

மாத சம்பளம் 2 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள் : பிரித்தானியர்கள் தான் வேண்டும் – வைரலாகும் விளம்பரம்!

  • May 15, 2023
  • 0 Comments

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறை மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகர ஊதியம் வழங்குவதாக கூறும் விளம்பர பதிவு வைரல் ஆகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்த மிகவும் கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறித்த விளம்பரத்தில்,  ‘டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டதா? ஆஸ்திரேலியாவுக்கு வாங்க! பிரிட்டனை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும். மாதம் 10 ஷிஃப்டுகள் மட்டும் வேலை […]

உலகம்

மெக்சிகோவில் வாகன விபத்தில் 26 பேர் பலி!

  • May 15, 2023
  • 0 Comments

வடக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேன் ஒன்றுடன், லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் வேன், மற்றும் லொறி ஆகிய இரண்டு வாகனங்கள் தீபிடித்து எரிந்தன. இதில் வேனில் பயணித்த 26 பேர் பலியாகியுள்ளனர். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. […]

இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி!

  • May 15, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நிலையானதாக உள்ளது. இதன்படி  கடந்த வாரம் 306.38 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 306.18 ரூபாவாக குறைந்துள்ளது. 320.03 ரூபாவாக ஆக காணப்பட்ட விற்பனை பெறுமதியானது 319.96 ரூபாவாக குறைந்துள்ளது. மக்கள் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 303.63 மற்றும் […]

இலங்கை

மகிந்தவை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை – சாகர காரியவசம்!

  • May 15, 2023
  • 0 Comments

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை  என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற வதந்திகள் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சதித்திட்டங்களினூடாக பிரதமர் பதவியைப் பெறுவதற்குத் தயாராக இல்லை எனவும் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீண்டும் நாட்டின் தலைமைப் பதவிக்கு திரும்பினால் அது மக்களின் விருப்பதுடனேயே நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு ஜுனில் விசாரணைக்கு!

  • May 15, 2023
  • 0 Comments

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு விசாரணை வரும் ஜுன் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், சட்டவிரோதமான முறையில் 75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சம்பாதித்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு இது சம்பந்தமான வழக்கினை தொடர்ந்த நிலையில், அதற்கு விமலின் வழக்கறிஞர் முதற்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில்  இது தொடர்பான வாதங்களை ஜூன் மாதம் 16ஆம் திகதி முன்வைக்குமாறு கொழும்பு உயர் […]