ஆசியா பொழுதுபோக்கு

த்ரிஷாவை ஓரம் கட்ட வரும் 19 வயசு செல்லமான ஹீரோயின்

தற்போது விஜய்யின் லியோ பட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சோசியல் மீடியா முழுவதுமே அது பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது.

பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருவது கூடுதல் சிறப்பு.

இதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கவும் செய்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் திரிஷாவை ஓரம் கட்டும் வகையில் 19 வயது இளம் நடிகை ஒருவர் விஜய்க்கு வலை வீசி இருக்கிறார்.

அதாவது லியோ படத்தை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் 68வது படம் பற்றிய பேச்சு இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சூப்பர் குட் ஃபிலிம்சின் 100வது படத்தில் விஜய்யை வைத்து தயாரிக்க இருக்கிறார் ஆர் பி சவுத்ரி.

இப்படத்தை தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் இயக்க உள்ளார்.

அதை தொடர்ந்து தெலுங்கு படமான கஸ்டடி படத்தின் இளம் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

அது குறித்த பேச்சு வார்த்தை இப்போது நடைபெற்று வருகிறதாம். இதனால் கீர்த்தி இப்போது ரொம்பவும் குஷியாக இருக்கிறார்.

ஏனென்றால் இவர் தன் சிறு வயதிலிருந்து விஜய் படங்களை பார்த்து சினிமாவில் நடிக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டதாக பலமுறை கூறி இருக்கிறார்.

மேலும் விஜய்யின் அப்படி போடு என்ற பாடலை போட்டுக் கொண்டு வீட்டில் ஆடிக் கொண்டிருப்பாராம்.

அதனாலேயே விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை வெகு நாளாக இருந்ததாகவும் அது தற்பொழுது நிறைவேற போவதாகவும் கூறி வருகிறார்.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content