100 டொலர் என்ற எல்லையை தாண்டியது கச்சா எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் அப்பகுதியிலிருந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற கவலை அதிகரித்துள்ள நிலையில், இன்றைய தினம்’பிரெண்ட்’ ரக (Brent) கச்சா எண்ணெய் விலை 100 டொலர் என்ற எல்லையை தாண்டியுள்ளது.
இதற்கமைய கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.2% அதிகரித்து 100.07 டொலராக உயர்ந்துள்ளது.
அதேவேளையில், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) கச்சா எண்ணெய் விலை 1.83% அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு 94.73 டொலராக அதிகரித்துள்ளது.
ஆறு மாதங்களாக நீடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுவதற்கான நம்பிக்கைகள் மங்கி வருவதால், கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து கச்சா எண்ணெய் விலை நான்கில் ஒரு பங்கு (25%) வரை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




