மண்டேல்சனின் நியமன ஆவணங்கள் அடுத்த வார இறுதிக்குள் வெளியிட வேண்டும் – அரசுக்கு அழுத்தம்
லார்ட் மண்டேல்சனின் நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த வார இறுதிக்குள் வெளியிட வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கெமி படேனொக் வலியுறுத்தியுள்ளார்.
மூடிமறைப்பு, சாக்குப்போக்கு, தாமதம் எதுவும் இருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
மேலும், அடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு நாடாளுமன்ற வழிமுறையையும் பரிசீலித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற தமக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
அதனை மேற்கொள்ளக்கூடியவர்கள் தொழிலாளர் கட்சி எம்.பிக்கள்தான், என்று கூறிய அவர், அவர்கள் உடந்தையாக இருப்பார்களா அல்லது சரியானதைச் செய்வார்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.





