உலகின் மிகப்பெரிய பனிப்பாறை முழுமையாக அழிந்தது!
உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக கருதப்பட்ட பாறை முழுமையாக கரைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A-23A எனப் பெயரிடப்பட்ட இந்தப் பெரும் பனிப்பாறை, 1986-ல் அண்டார்டிகாவில் உள்ள ஃபில்ச்னர் (Filchner ) பனிப்பாறையிலிருந்து பிரிந்தது. பல ஆண்டுகளாக இதுவே உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக காணப்பட்டது.
40 ஆண்டுகளாக காணப்பட்ட குறித்த பாறையானது 2026 ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் முழுமையாக கரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பயணத்தை செயற்கைக்கோள் படங்கள் பதிவு செய்துள்ளன. 2,300 கி.மீ-க்கும் (1,429 மைல்கள்) மேலாக வடக்கே நகர்ந்து, தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகளுக்கு அருகிலுள்ள வெப்பமான நீர்ப்பகுதிகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்டுள்ளது.
சமீபகாலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை பனிப்பாறைகள் விரைவாக உருகுவதற்கு ஏதுவாக அமைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.





