இலங்கை

திரையரங்கில் கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் கண்டுப்பிடிப்பு

கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹன்வெல்ல வீதியில் உள்ள ஒரு திரையரங்கில் பொலிஸார் திடீர் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மில்லத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் (repeater) ரக துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12-போர் (12-bore) ரக துப்பாக்கி, 398 எண்ணிக்கையிலான 12-போர் ரக தோட்டாக்கள், 278 எண்ணிக்கையிலான 16-போர் ரக தோட்டாக்கள், .32 ரக துப்பாக்கிக்கான 49 தோட்டாக்கள், அதே ரகத்தைச் சேர்ந்த மேலும் 3,083 தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCD) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்