ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அதிவேக பாதையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்

ஜெர்மனியில் அதிவேக பாதையில் உயிர் ஆபத்தை விளைவிக்க கூடிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியின் அதிவேக போக்குவரத்து பாதை A 44 இல் நேற்றைய தினம் மார்ச் 30 ஆம் திகதி நபர் ஒருவர் துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்குரிய ரவைகளுடன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

அதாவது குறித்த நபர் சென்ற வாகனத்தை தற்செயலாக பொலிஸார் சோதனை செய்துள்ளனர் இந்நிலையிலேயே இந்த ஆபத்தான ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் இருந்து 11 பிஸ்டல் மற்றும் 6800 துப்பாக்கிகளுக்குரிய ரவைகளும் காணப்பட்டதாக தெரிய வந்திருக்கின்றது.

மேலும் குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்திய போது பல தகவல்கள் தெரியவந்திருக்கின்றது.

அதாவது இந்த நபரானவர்  தான் இந்த வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் ஒல்லாந்து நாட்டில் வேண்டியதாகவும் பின்னர் தாம் வேறு ஒரு நாட்டுக்கு எடுத்துச்சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளையில் இவ்வகையான ஆயுதங்களை ஜெர்மனி நாட்டின் ஊடாக எடுத்து செல்வதற்கான உரிய அனுமதி பத்திரம் இவரிடம் காணப்படவில்லை என தெரிய வந்திருக்கின்றது.

குறித்த நபரை ஆயுதங்களுடன் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி