உலகம்

ஜப்பானில் இயற்கை சீற்றத்தால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கிழக்கு ஜப்பானில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, சிபா மாகாணம் முன்னெப்போதும் இல்லாத மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.  குறித்த மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 367 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதற்கு முன்னர், அக்டோபர் 2023 இல்  24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 309 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

இந்தக் கனமழையால் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகளும் ரயில் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் விளைவாக, டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் தவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், கனமழையால் ஏற்படும் வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு, வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அரசு அலுவலகங்களையும் பள்ளிகளையும் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்