இலங்கை செய்தி

அனோஜன் சிவராசாவுக்கு முழு விடுதலை: இரு வாரங்களுக்குள் இலங்கை திரும்புவார்

சவூதி நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனோஜன் சிவராசா விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சவூதி நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனோஜன் சிவராசா முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அனோஜன் சிவராசாவின் குடும்ப உறவுகள் இன்று (11) வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு வருகை தந்து, தமது மகனை விடுவிப்பதற்கு மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளுக்காக ஜனாதிபதி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் சரியான வழிகாட்டல், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் இராஜதந்திர தலையீடு மற்றும் ஏனைய இராஜதந்திர முயற்சிகளின் பலனாகவே அனோஜன் சிவராசாவை விடுவிக்க முடிந்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இதற்காக ஒத்துழைப்பு நல்கிய சவூதி அரசாங்கம், அந்நாட்டு நீதிமன்றம், சவூதி மற்றும் இலங்கை இராஜதந்திர நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் இதற்காக சவூதி அரேபியா சென்ற சட்டத்தரணிகள் குழுவிற்கும் இதன் கௌரவம் உரித்தாவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

2026 செப்டம்பர் 17ம் திகதி கிழக்கு பிராந்திய சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. அவதூறானது எனக் கருதப்படும் ஃபேஸ்புக் (Facebook) பதிவொன்று தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமையவே இத்தண்டனை வழங்கப்பட்டது.

இராஜதந்திர மற்றும் ஏனைய தலையீடுகளின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 14ம் திகதி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் இரத்து செய்தது. இருப்பினும், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஏனைய தண்டனைகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்காக இராஜதந்திர ரீதியில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக அவர் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ் வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்வதில்லை என சவூதி அரேபியாவின் அரச வழக்கறிஞர் (Public Prosecutor) அலுவலகம் 2026 நவம்பர் 09ம் திகதி தீர்மானித்துள்ளது.

அனோஜனுக்கு தற்போது சவூதி நீதிமன்றத்தில் வழக்கு இல்லை எனவும், அவரை இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை