இலங்கை

இலங்கை பாடசாலை மாணவிக்கு சிறுவன் செய்த அதிர்ச்சி செயல்

தம்புத்தேகம பிரதேசத்தில் 15 வயதான பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவியின் நண்பி, மாணவிக்கும் இளைஞன் ஒருவருக்கும் இடையில் இருக்கும் காதல் தொடர்பு குறித்து மாணவியின் தாயிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து தாய் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவியின் பெற்றோர் வியாபாரத்திற்காக வெளியில் சென்ற பின்னர், சந்தேக நபரை வீட்டுக்கு வரவழைத்த சந்தர்ப்பில் இந்த வன்புணர்வு சம்பவம் நடந்துள்ளது.

நடந்த சம்பவங்களை மாணவி தனது நண்பியிடம் கூறியுள்ளதுடன் மாணவி தவறான வழியில் செல்வதை தடுக்க , நண்பி, மாணவியின் தாயாரிடம் விபரங்களை கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் பாடசாலை மாணவி தாயாருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதுடன் தற்போது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்