செய்தி தமிழ்நாடு

அண்ணாமலை கீழ்பாக்கத்திற்கு செல்வது நல்லது – புகழேந்தி விமர்சனம்!

அண்ணாமலை கீழ்பாக்கத்திற்கு செல்வது நல்லது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.

ஓதமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை போல் தன்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி பேசும்போது, அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு போவது நல்லது என கூறியுள்ளார்.

ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா மாநிலத்தில் செய்தி பரவினால், அங்கு நடைபெறும் அம்மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்கும். அண்ணாமலைக்கு என்ன ஆச்சுனு தெரியவில்லை.

அவருக்கு மென்டலி பிராப்ளம்னு பேசிக்குறாங்க. என்னோட தாய் 100 மடங்கு, மனைவி 1000 மடங்கு உயர்ந்தவர் என்கிறார். இவரை யார் கேட்டது?. ஓபிஎஸ் அல்லது வேறு யாராவது பாஜகவை பேசினார்களா?.

அம்மாவை தவறாக பேசிய விவகாரம் கர்நாடகா மாநிலத்தில் செய்தி பரவினால், சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றுவிடும். அங்குள்ள தமிழர்கள் மதிக்கவே மாட்டார்கள்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி