செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்

கும்பேம்ருகசிரோத்பூதம் யாமுநார்ய பதாச்ரிதம்

தேவராஜ தயா பாத்ரம் ஸ்ரீகாஞ்சீ பூர்ணமாச்ரயே

தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம்

ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயே

மருவாரும் திருமல்லிவாழ வந்தோன் வாழியே

மாசி மிருக சீரிடத்தில் வந்துதித்தான் வாழியே

அருளாளருடன் மொழிசொல் அதிசயித்தோன் வாழியே

ஆறுமொழி பூதூரர்க் களித்தபிரான் வாழியே

திருவால வட்டம் செய்து சேவிப்போன் வாழியே

தேமராசாட்டகத்கைச் செப்புமவன் வாழியே

தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே

திருக்கச்சிநம்பி இரு திருவடிகள் வாழியே. 1.3.23.

இன்று

வியாழக்கிழமை

சுபகிருது வருடம் :

மாசி மாதம் !

18ஆம் தேதி !

மார்ச் மாதம்:

02ஆம் தேதி !!

(02-03-2023)

சூரிய உதயம் :

காலை : 06-25 மணி அளவில் !

இன்றைய திதி :

இன்று காலை 09.40 வரை தசமி ! பின்பு  ஏகாதசி !!

இன்றைய நட்சத்திரம் :

இன்று மாலை

03.21 வரை திருவாதிரை ! பின்பு புனர்பூசம்  !!

யோகம் :

இன்று காலை 06.28 வரை சித்தயோகம் ! பின்பு மாலை 03.21 வரை யோகம் நன்றாக இல்லை !! பின்பு அமிர்தயோகம் !!!

இன்று

மேல் நோக்கு நாள் !

நல்ல நேரம் :

காலை : 10-30 மணி முதல் 11-30 மணி வரை !

மாலை  : 00-00 மணி முதல் 00-00 மணி வரை!!

சந்திராஷ்டமம் : அனுஷம்  ! கேட்டை  !!

ராகுகாலம் :

பிற்பகல் : 01.30 மணி முதல் 03-00 மணி வரை !

எமகண்டம்

காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!

குளிகை :

காலை  : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

சூலம் : தெற்கு !

பரிகாரம்: தைலம் !

வியாழக்கிழமை ஹோரை

காலை

6-7.   குரு.சுபம்

7-8. செவ்வா.அசுபம்

8-9. சூரியன்.அசுபம்

9-10. சுக்கிரன்.சுபம்

10-11. புதன்.சுபம்

11-12. சந்திரன்.சுபம்

பிற்பகல்

12-1. சனி..அசுபம்

1-2. குரு.சுபம்

2-3. செவ்வா.அசுபம்

மாலை

3-4. சூரியன்.அசுபம்

4-5. சுக்கிரன்.சுபம்

5-6. புதன்.சுபம்

6-7. சந்திரன்.சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

ராமாயணத்தில் சீதையை மிஞ்சியதோர் பதிவிரதை மனைவி.

ராமாயணத்தில் உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி யார் என்றால் லட்சுமணன் மனைவி ஊர்மிளா தான். ஏனெனில் கணவன் லட்சுமணன், ராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவள்.

ஜனக மகாராஜாவின் தத்து மகள் தான் சீதை. ஆனால் ஜனகரின் உண்மையான மகள் ஊர்மிளா!ஜனகரின் தம்பி குஜஸ்த்வஜாவின் மகள் மாண்டவி. இவள் பரதனை மணந்தவள். இன்னொரு மகள் ஸ்ருதகீர்த்தி. இவள் சத்ருக்கனை மணந்தவள்.

இந்த நான்கு சகோதரிகளும் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இல்லை! இதற்குத்தான் ஒரே வீட்டில் அக்கா, தங்கையைத் திருமணம் செய்து தருவதற்கு அந்தக் காலத்தில் மிகவும் தயங்குவார்கள்.

மேலும் லட்சுமணனின் மனைவி ஊர்மிளா உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி மட்டுமல்லாது, கணவனின் 14 ஆண்டு காலத் தூக்கத்தையும், தானே வாங்கிக் கொண்டு கணவனுக்காக வாழ்ந்தவள்.

காட்டில் ராமனும் சீதையும் குடிலில் உறங்கிக் கொண்டிருந்த போது குடிலுக்கு வெளியே லட்சுமணன் உறங்காமல் காவல் காத்துக் கொண்டிருப்பான். அப்போது நித்திராதேவி, லட்சுமணனை உறங்க வைக்க முடியாமல் மிகவும் திணறுவாள்.

அவள் லட்சுமணனிடம் சொல்கிறாள், இதோ பார், நீ இப்படி உறங்காமல் இருக்கவே முடியாது. நான் உன்னை விட்டு விலக வேண்டுமானால் நீ உன் தூக்கத்தை வேறு ஒரு நபரிடம் பகிர்ந்து கொள். உன்னை விட்டு விடுகிறேன் என்கிறாள்.

உடனே லட்சுமணன், நீ என் மனைவி ஊர்மிளாவிடம் சென்று நான் கூறியதாய் என் தூக்கத்தையும் அவளையே எடுத்துக் கொள்ளச் சொல். நிச்சயம் அவள் ஒப்புக் கொள்வாள் என்கிறான்.

நித்திராதேவியும் அப்படியே ஊர்மிளாவிடம் சென்று விஷயத்தைக் கூற, அவளும் கணவனின் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவன் தூக்கத்தையும் தானே வாங்கிக் கொண்டு, அந்த 14 வருடங்களில் பெரும் பகுதியைத் தூங்கியே கழித்தாள்.

அவள் அப்படிச் செய்ததன் காரணமாகத்தான் லட்சுமணனால் ராவணன் மகன் இந்திரஜித்தை, கண்ணுக்குப் புலப்படாமல் போர் புரிகின்ற அவனை, கொல்ல முடிந்தது!

அது எப்படி என்றால் இந்திரஜித்தை கொல்ல வேண்டுமானால் ஒருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் கண் விழித்திருக்க வேண்டும் என்று ஒரு தெய்வ நிபந்தனை இருந்து வந்தது. ஊர்மிளா கணவனின் தூக்கத்தை வாங்கிக் கொண்டதால் தான் அது சாத்தியமாயிற்று.

ஊர்மிளாவின் உதவி என்பது நம்முடைய மூதாதையர்களின் கண்ணுக்குத் தெரியாத உதவியைப் போன்றது. அது வெளி உலகிற்குத் தெரியாமலேயே போய் விடும் தன்மையைக் கொண்டது.

அதுமட்டுமல்ல, ராமனுடன் காட்டுக்குப் போவதற்கு முன், ஊர்மிளாவைப் பார்க்க வருகிறான் லட்சுமணன். அந்த சமயத்தில், அதாவது அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கி இருக்கும் போது, ஊர்மிளா தன்னை நன்கு சீவி முடித்து சிங்காரித்து, எல்லா அணிகலன்களையும் அணிந்து,

பஞ்சணையில் ஒய்யாரமாக உட்காரந்திருப்பதைக் கண்டு கடும் கோபம் கொள்கிறான் லட்சுமணன். மேலும், அரச போகங்களை ஆண்டு அனுபவிக்கத்தான் லட்சுமணனை அவள் மணந்து கொண்டதாகவும், எனவே லட்சுமணன் ராமனுடன் காட்டுக்குப் போகக் கூடாது என்றும் பிடிவாதம் பிடிக்கிறாள் ஊர்மிளா.

வெறுப்பின் உச்சத்திற்கு சென்று விட்ட லட்சுமணன், அவளைக் கடுமையாக ஏசி விட்டு, அவ்விடத்தை விட்டு விலகுகிறான்.லட்சுமணன் சென்ற அடுத்த கணமே ஊர்மிளா கேவிக்கேவி அழுகிறாள்.

அதாவது லட்சுமணன் தன்னை முழுக்க முழுக்க வெறுக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறாள். தன்னுடைய கணவன் ராமனுக்கு செய்ய வேண்டிய சேவைகளில் எந்த வித பங்கமும் வந்து விடக்கூடாது,

தன்னைப் பற்றிய ஆசாபாசங்கள் கிஞ்சித்தும் அவனது மனதில் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணமே அவளது மனதில் மேலோங்கி இருந்தது.

14 ஆண்டுகள் கழிந்து, ராமன் அயோத்தி வந்த பின், லட்சுமணனின் உதாசீனப் போக்கைக் கண்டு, சீதை அதைப்பற்றி ஊர்மிளாவிடம் விசாரிக்கிறாள். முதலில் அவள் எதையும் கூற மறுக்கிறாள். ஒரு கட்டத்தில் கர்ப்பிணியான சீதையின் கண்ணீருக்கு இரங்கி,

உண்மையை விளக்குகிறாள் ஊர்மிளா. பிரமித்துப் போன சீதை, தன்னைப் போன்ற ஆயிரம் சீதைகள் வந்தாலும் ஒரு ஊர்மிளாவுக்கு ஈடாகாது என்று உருகிப் போகிறாள்.

இந்த விஷயத்தை, தன்னை தேரில் கொண்டு போய் காட்டில் விட வந்த லட்சுமணனிடம் கூறுகிறாள் சீதை. நொறுங்கிப் போகிறான் லட்சுமணன். தன்னை ராமன் கைவிட்டது போல் ஊர்மிளாவைக் கைவிட்டு விடாதே என்று கேட்டுக் கொள்கிறாள் சீதை.

ஊர்மிளாவைக் காண விரைகிறான் லட்சுமணன். அவளைக் கண்ட அடுத்த கணமே, அவள் தன் மனைவி தான் என்பதையும் மறந்து, அவளது கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறான் லட்சுமணன். இறுகப் பிடிக்கப்பட்ட அவளது பாதங்கள் லட்சுமணனின் கண்ணீரால் நனைகிறது.

இப்படி நம் வாழ்க்கையிலும் நமக்குத் தெரியாமல் கூட சிலர் உதவி புரிந்திருப்பார்கள். அது கடைசி வரை தெரியாமலும் நமக்கு போகக் கூடும்!

ஸ்ரீ குரு அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!

சௌஜன்யம்..!

அன்யோன்யம் .. !!

ஆத்மார்த்தம்..!

தெய்வீகம்..!.. பேரின்பம் …!!

அடியேன்

ஆதித்யா

(Visited 1 times, 1 visits today)

Avatar

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்