இலங்கை

தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் இன்று

தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் தொடரும் தாமதம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமை என்பன உள்ளடங்கலாக தமிழர் விவகாரங்களில் அரசாங்கத்தின் தற்போதைய போக்கு மற்றும் இதனைக் கையாள்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சமத்துவக்கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சந்திப்பின்போது விசேடமாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்