ஐரோப்பா செய்தி

டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் நகரத்தை குறிவைத்த ரஷ்யா : இருவர் உயிரிழப்பு, 29 பேர் காயம்!

ரஷ்ய உக்ரைன் இடையிலான போர் ஓர் ஆண்டைக் கடந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பகுதிகள் தாக்கப்படுகின்றன.

அந்தவகையில் இன்று காலை டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் நகரம் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு ரஷ்ய எஸ்-300 ஏவுகணைகள் நகர மையத்தை தாக்கியதாக ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் நிர்வாக மற்றும் அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஏழு வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதியில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி