இலங்கை முக்கிய செய்திகள்

இஸ்ரேலில் இலங்கை ஒருவர் காயம் – ஒருவரை காணவில்லை

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா நகரங்களை மையமாக கொண்டு வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தென் பிராந்தியத்தில் இருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் ஊழியர் என அவர் கூறியுள்ளார்.

வயிற்றிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை. மற்றுமொரு இலங்கை இளைஞரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தொடர்பில் அறிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content