இலங்கை செய்தி

அம்பாறையில் மலசல கூட குழியில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தை!

அம்பாறையில் மலசல கூட குழியில் வீழ்ந்து இரண்டரை வயது ஆண் பிள்ளை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை (01) பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உயிரிழந்த பிள்ளையின் தந்தை வெளிநாடொன்றில் தொழில் புரிந்துவரும் நிலையில் இரு பிள்ளைகளின் தாயும் உயிரிழந்த பிள்ளையும் அயலில் உள்ள உறவினர் வீடொன்று வழமைபோன்று சென்றுள்ளனர்.

அங்கு அப்பிள்ளையின் தாயார் உறவினர்களுடன் இணைந்து சிறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் யாரும் அவதானிக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளை வெளியேறியுள்ளது.வெளியேறிய பிள்ளை அருகில் இருந்த வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்ட மலசல கூட குழியில் வீழ்ந்துள்ளது.

 

 

சில நிமிடங்களில் பிள்ளையினை காணாத தாயும் உறவினர்களும் தேடியபோது மலசலகூட குழியில் இருந்து பிள்ளையை எடுத்து வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் பிள்ளை உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்படும் இதுபோன்ற குழிகள் மூடப்படுவது மிக முக்கியம் என்பதை இச்சம்பவங்கள் உணர்த்தியுள்ள

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content