இந்தியா செய்தி

வீட்டிற்குள் புகுந்து தாக்கிய 20 குரங்குகள்.. பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி!

இந்திய மாநிலம் தெலங்கானாவில் குரங்குகள் கூட்டமாக வந்து தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ராமரெட்டி கிராமத்தில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த குரங்குகள் அடிக்கடி வீதிகளில் நடமாடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நர்சவ்வா என்ற மூதாட்டி (70) ஒருவரின் வீட்டிற்குள் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் நுழைந்துள்ளன. அங்கு பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த அவரை சரமாரியாக அந்த குரங்குகள் தாக்கியுள்ளன. இதில் அவர் படுகாயமடைந்தார்.

குரங்குகள் கூட்டமாக வருவதைக் கண்ட கிராம மக்கள், வீடுகளுக்குள் சென்று கதவை போட்டிக்கொண்டனர். அவை கிராமத்தை விட்டு சென்ற பின்னரே மூதாட்டி தாக்கப்பட்டது அவர்களுக்கு தெரிய வந்தது.

படுகாயத்துடன் இருந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி