ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் மத்திய வங்கி நிதிகளை முடக்குமாறு உலக வங்கிக்கு உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள்!

ரஷியா தனது அராஜகத்திற்கான முழு விலையை உணர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.

ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசும்போது சர்வதேச நாணய நிதியகம் மற்றும் உலக வங்கிகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அதில்  உலகம் முழுவதும் உள்ள ரஷியாவின் மத்திய வங்கியின் சொத்துகள்  நிதிகளை முடக்க வேண்டும் என்றும் அவற்றை கொண்டு உக்ரைனை மறுகட்டமைப்பு செய்ய உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

உக்ரைனில் ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்காக இந்த நடவடிக்கையை ரஷியாவுக்கு எதிராக எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டு உள்ளார். ரஷியா தனது அராஜகத்திற்கான முழு விலையையும் உணர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் வீடியோவில் பேசும்போது  ரஷிய படையெடுப்பின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள்  ரஷியாவின் வெளிநாட்டில் உள்ள 6 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளை முடக்கும் என அறிவித்தது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி