இந்தியா செய்தி

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் திடீரென உயிரிழப்பு

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் இன்று இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் பாணந்துறை திக்கல பிரதேசத்தைச் சேர்ந்த நயனா ரோஷினி என்ற 52 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் குழுவொன்று இன்று இரவு குறித்த வீட்டை சுற்றிவளைத்துள்ளது.

குறித்த பெண் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் திடீரென சுகவீனமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன் பிரகாரம் குறித்த பெண்ணை அவரது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி